பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இவைகளுக்கு நீங்கள் இரையாகிவிடுவீர்கள்!' என்று அவன் உரக்கக் கத்தினான். வீட்டிலிருந்து ஓடிவந்த அடிமைகளில் ஒருவனின் பெயர் சம்போ, மற்றவன் பெயர் கிம்போ. அவர்கள் இருவரும் லெகிரிக்கு வலக் கையாகவும், இடக் கையாகவும் விளங்கி வந்தவர்கள். அவர்கள் கொடுமைக்கு எல்லை கண்டவர்கள். முரட் டுத்தனத்திலும் மூர்க்கத்திலும் அவர்கள் வேட்டை நாய்களைப் போன்றவர்கள். அவ்வாறு அவர்களைப் பயிற்சி செய்து வைத்திருந்தான் லெகிரி. அவர்கள் அவன் என்ன சொன்னாலும் செய்து முடிப்பார்கள். அவர்கள் உருவத்தில் மனிதர்களாக இருந்தாலும், அவர்களுடைய உள்ளங்கள் கல்லாகிவிட்டன. அடிமைகளை அடக்கி ஒடுக்குவதில் அவர்கள் நிகரற்ற வர்கள் என்று பெயர் வாங்கியவர்கள். அவர்களிடம் லெகிரி, தோட்டக் காடுகளில் வேலை முறையாக நடக்கின்றதா என்று விசாரித்தான். அவர்கள், 'ஆம், யசமான்!' என்று கூறினார்கள். 'நீங்கள் இந்த அடிமைப் பயல்களைக் கூட்டிக் கொண்டுபோய், அவர்கள் தங்கவேண்டிய இடங் களைக் காட்டுங்கள். சம்போ, உனக்காக ஒரு ஸ்திரீ யைக் கொண்டு வந்திருக்கிறேன்! அவளை நீ மனைவி யாக வைத்துக்கொள்!' என்று சொல்லி, லெகிரி தான் அழைத்து வந்திருந்த ஸ்திரீயைச் சம்போவிடம் பிடித் துத் தள்ளினான். அந்த ஸ்திரீ நடுங்கிக்கொண்டு பின்னால் ஓடி வந்து, 'என் கணவர் நியூ ஆர்லியன்ஸில் இருக்கிறார்' என்று கூவினாள். 'அதனால் என்ன? அவனுக்குப் பதிலாகத்தான் நான் வேறொரு கணவனைக் கொடுத்துவிட்டேன்!

85

85