பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உன் பூச்செல்லாம் இங்கே பலிக்காது!’ என்று உரக் கக் கத்திக்கொண்டு, லெகிரி சவுக்கை ஓங்கினன். அடுத்தாற்போல் அவன் எமிலினைப் பார்த்து, நீ வீட்டினுள்ளே என்னுடன் இருக்கலாம்!' என்று பின்னல் அந்த இரண்டு பெண்களுக்கும் என்ன நேர்ந்ததென்பது டாமுக்குத் தெரியாது. ஏனெனில், சம்போ அவன் கழுத்தைப்பிடித்துத் தள்ளிக்கொண்டே சென்ருன். வீட்டிலிருந்து வெகு தூரத்திற்கப்பால், வரிசை வரிசையாகச் சில குடிசைகள் இருந்தன. அவைகளைப் பார்த்தவுடன், டாம் மிகவும் வருத்த மடைந்தான். தனக்கென்று தனியான ஒரு குடிசை இருக்குமென்று அவன் எண்ணிக் கொண்டிருந்தான். ஒழிந்த நேரத்தில் வேதப் புத்தகத்தைப் படிக்கலாம் என்றும் அவன் எண்ணியிருந்தான். ஆளுல் குடிசை கள் பற்பல அடிமைகளைச் சேர்த்து அடைக்கும் தொழுவங்களாகவே இருந்தன. ' கான் இருக்க வேண்டியது எங்கே ? என்று அவன் சம்போவிடம் பணிவுடன் கேட்டான். அதுதான் எனக்கும் தெரியவில்லை இந்தக் குடிசைகளில் எதிலாவது போய் இருந்துகொள். கூட் டம் பெருகிவிட்டது. என்ன செய்வதென்று எனக்கும் தெரியவில்லை' என்ருன் சம்போ, இரவில் வெகு கேரத்திற்குப் பின்னர் அடிமைகள் வேலே முடிந்து திரும்பிவந்தனர். கிழிந்த உடைகளும், மெலிந்த உடல்களும் கொண்டு, அவர்கள் அசைந்து ஆடி வந்தனர். சூரியன் உதிக்கு முன்பே அவர்கள் வயல்களுக்குச் சென்றவர்கள். அப்பொழுது பருத்தி எடுக்கவேண்டிய காலமாயிருந்ததால், அவர்கள் இரவு

86

86