பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கொண்டு, நிறுக்குமிடத்தை நா டி ச் சென்றனர். அங்கே லெகிரி சம்போவிடமும், கிம்போவிடமும் பேசிக்கொண்டிருந்தான். அப்பொழுது சம்போ, 'யச மான், இந்த டாமைக் கொஞ்சம் கவனிக்கவேண்டும்!” என்று சொன்னுன். அவன் தன் கூடையிலிருந்த பருத்தியை லூஸியின் கூடடையில் அள்ளி அள்ளிப் போடுகிருன். அவனுல் எல்லா நீகிரோக்களும் கெட் டுப்போவார்கள். அவன் சாதாரணமான ஆளாக இல்லை' என்றும் தெரிவித்தான். 'கறுப்பு நாய் அப்படியா செய்கிருன் ? அவன் உடம்பை ஒருமுறை பிடித்துவிட வேண்டியதுதான்!” என்ருன் லெகிரி. "பிடித்துவிடுதல் என்ருல் என்ன என்பதை அந்த இரண்டு நீகிரோவர்களும் அறிவார்கள். அதைக் கேட்டு அவர்கள் எக்களிப்போடு சிரித்தார்கள். -- அடிமைகள் ஒவ்வொருவராகப் பருத்திக் கூடை யைத் தராசில் கொண்டுவந்து வைத்தனர். ஒவ்வொரு கடடையும் எடை போடப்பட்டது. லெகிரியே ஒவ் வொருவர் பெயரையும், எடையையும் ஒரு கரும் பலகையில் குறித்துக்கொண்டான். டாமின் கூடை யும் குறித்த எடைப்படி சரியாயிருந்தது. லூஸியின் கூடை சரியான எடையிருக்குமா என்பதை அவன் ஆவலுடன் கவனித்துக் கொண்டிருந்தான். லூஸி தள்ளாடிக்கொண்டே கூ ைட ைய க் கொணர்ந்து தராசில் வைத்தாள். அதுவும் குறித்த அளவு இருந்தது. இருந்தபோதிலும் லெகிரி, அது குறைவாயிருந்தது போலப் பாவனை செய்துகொண்டு, கோபத்தோடு ஊளையிடத் தொடங்கின்ை சோம் பேறிக் கழுதை இன்றைக்கும் மறுபடி குறைவாயிருக்

9 I

91