பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

டாக்டர். எஸ் நவராஜ் செல்லையா


இதயமானது, பிராணவாயு கலந்த இரத்தத்தை உடலெங்கும் இறைத்து விடுகிறது. கழிவுப் பொருட்களான கரியமிலவாயு போன்ற பொருட்களைத் திரட்டிக்கொண்டு வந்து, இரத்தமானது நுரையீரலுக்குள் தள்ளிவிடுகிறது.

உடற்பயிற்சி செய்து நலமுடன் இருப்பவர்கள் இதயம் ஓய்வுடனும், சக்தியுடனும் இயங்குகிறது. பலமற்றவர்களுக்கு கடுமையாக, அதிகமாக, ஓய்வின்றி இதயம் உழைக்கிறது.

அது எப்படி என்று காண்போம்.

இதயத்தின் வேலை

உடற்பயிற்சி செய்கிறவர் இதயம் 1 நிமிடத்திற்கு 60 முறை (இதயம்) துடித்து இரத்தத்தை இறைக்கிறது. ஒரு மணிக்கு அது 3600 முறையும், 24 மணி நேரமாகிய ஒரு நாளைக்கு அது 86,400 முறையும் துடித்து உழைக்கிறது.

உடற்பயிற்சி செய்யாத ஒருவரது இதயம் 1 நிமிடத்திற்கு 80 முறை துடிக்கிறது 1 மணிநேரத்திற்கு 4,800 முறையும், ஒரு நாளைக்கு 1,15,200 முறையும் துடிக்கிறது.

அதாவது, உடற்பயிற்சி செய்யாத ஒருவரது இதயம் நல்ல பயிற்சி செய்பவர் இதயத்தைவிட, ஒரு நாளைக்கு 30,000 முறை அதிகமாகத் துடிக்கிறது.

பயிற்சி செய்பவரது இதயம் குறைவாகத் துடித்து, அதிகமான இரத்தத்தை உடலுக்கு இறைக்கிறது. இதனால், உடலானது அதிக இரத்தக் குழாய்களை தசைகளுக்குள் வளர்த்துக்கொள்ள முடிகின்றன. இப்படி தசைகள் தமது செல்களுக்கு நிறைய இரத்தத்தைப் பெறுவதால், நலமாகவும் வளமாகவும் இருப்பதால்தான், வயது அதிகமானாலும் உடலை முதுமை தாக்க முடியாமற் போகிறது.

பயிற்சி செய்பவருக்கு இரத்த ஓட்டம் சீராகவும் தடையில்லாமலும் ஓடுகிறது. பயிற்சி செய்யாதவருக்குத் தடைகள் இருப்பதால், அதாவது இரத்தக் குழாய்களில்