பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் இளமையாக வாழலாம்

111
இளமையும் முதுமையும்

நீங்களும் இளமையாக வாழலாம்!

நம்பிக்கையோடு தான் இந்த முயற்சியைத் தொடங்குகிறேன். ஏனென்றால், வாழ்க்கையே நம்பிக்கையில் தான் நடந்து கொண்டிருக்கிறது.

நாம் நீண்ட நாட்கள் வாழப்போகிறோம் என்ற நம்பிக்கையில் தான் பணம் சேர்க்க முயற்சித்துப் பாடாய் படுகிறோம். நிலபுலம், சொத்து சுகம், பதவி மோகம் என்பனவற்றிற்கெல்லாம் ஆளாய் பறக்கிறோம்! ஏனென்றால், அதுதான் நம்பிக்கை.

தலைப்பு சிறப்பாகத்தான். இருக்கிறது. இளமையாக வாழலாம் என்று! ஆனால் மலைப்பாகவும் இருக்கிறது வியப்பாகவும் இருக்கிறது என்றார் என் நண்பர் ஒருவர்.

ஆமாம்! இளமையாக வாழலாம் என்பது தலைப்பென்றால் அதனுள்ளே எத்தனை எத்தனை கேள்விகள் தலைக்குமேல் கத்திகளாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. தெரியுமா? அவைகளுக்கு விடையளித்துத் தப்பிப்பதற்குள் விலா எலும்புகளும் நொறுங்கிப்போய் விடும் போலிருக்கிறது. அவ்வளவு