பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் இளமையாக வாழலாம்

25



வயதால் வரும் முதுமை:

மாறுகின்ற காலங்களுக்கிடையில்தான் மனிதர்கள் வாழ்கின்றார்கள். காலங்கள் மட்டும் மாறுவதில்லை; மனப்போக்கில், செயல்முறைகளில் ஆசைகளில், உணர்வுகளில் மக்களும் மாறிக் கொண்டே வருகின்றார்கள்.

காலங்கள் மாறி மாறி வருவது இயற்கை. இயற்கையின் எழில்மிகு பிறப்பான மனித உடலும் மாற்றம் பெறுவது இயற்கைதானே! தனது உடலில் மாற்றம் விளைவதை ஒவ்வொரு மனிதரும் உணர்கிறார்கள். அறிகின்றார்கள் அதை ஏற்று கொள்ளத்தான் வேண்டும்!

சிறு குழந்தை வாலிப வயதை அடைய விரும்புகிறது. ஆனால் வாலிபர்களோ முதுமை அடைவதை விரும்புவதில்லை. 15 வயது இளைஞன் தன்னை 20 வயது இளைஞனாகக் கூறிக் கொள்ள விரும்புகிறான். ஆனால் 30 வயது மனிதன் தன் உண்மை வயதை மறைத்து, வயதைக் குறைத்து சொல்லி மகிழ்கிறான். இதில் ஒன்றுமட்டும் நமக்கு நன்றாகப் புரிகிறது. மனிதர் யாரும் முதுமை அடைவதை விரும்பவில்லை என்பதுதான். இதை முக்கியமாக நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

மனிதர்களுக்கு வயது மட்டும் உயர்வதில்லை, ஆசைகளும்தான் உயர்ந்துகொண்டே போகின்றன. அதனால் என்ன? கூடவே கவலைகளும் , கலவரங்களும், கலக்கங்களும், கற்பனைப் பயங்களும் நிறைய வந்து விடுகின்றன. அது மட்டுமல்ல. அடுத்தவர் இடத்தை பிடித்துக் கொள்ளக்கூடிய ஆக்ரோஷமான உணர்வும், ஆக்ரமிக்கும் பண்புகளும் அடுத்தடுத்து அவர்களுக்கு வந்து சேர்கின்றன.

ஒரு நகரத்திற்கு ஒரு மாயாவி வந்து சேர்ந்தான். அந்த நகரத்தின் தலைவர்களிடம் சென்று, இறந்து போன உங்கள்