பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

டாக்டர். எஸ் நவராஜ் செல்லையா


முன்னோர்களையெல்லாம் உயிர்ப்பித்து தருகிறேன். நான் கேட்கின்ற பணத்தைக் கொடுத்து விடுங்கள் என்று கேட்கிறான். தலைவனுக்கு மட்டுமல்ல. அந்த நகரத்து மக்களுக்கெல்லாம் சந்தோஷம். அவர்களும் ஓர் ஆனந்தக் கூத்தையே ஆடிக் களைத்துப் போனார்கள். அவ்வளவு மகிழ்ச்சி அவர்களுக்கு.

எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் தருகிறோம். எங்கள் தாய் தந்தையரை, பாட்டன் பாட்டியரை இறப்பிலிருந்து எழுப்பித்தாருங்கள் என்று கேட்டு, உயிர்ப்பிக்க ஒப்புதலும் தந்தனர்.

‘இன்னும் ஒருவாரம் கழித்து வருகிறேன். நீங்கள் பிரிந்து விட்டிருக்கும் பெரியவர்களையும் உறவினர்களையும் சந்தித்து மகிழத் தயாராக இருங்கள்’ என்று சொல்லிவிட்டுப் போனான் அந்த மாயாவி, அனைவரும் அவனை ஆர்ப்பாட்டமாக, ஒரு விழாவெடுத்து அனுப்பி வைத்தார்கள்.

ஒருவாரம் ஓடோடி விட்டது. மாயாவி வந்தான் அவனை வந்து வரவேற்க அந்த நகரத்திலிருந்து ஒருவர் கூட வரவில்லை. அவனைப் பார்க்கவே அஞ்சினார்கள். அவன் பெயரைக் கேட்டதுமே பரபரப்படைந்தார்கள். ஒதுங்கி ஒளிந்து கொண்டார்கள். அவன் அப்படி உயிர்ப்பிக்கும் வேலையை ஒத்துக் கொள்ள மறுத்தார்கள். அந்தச் செயலை இழிவுச் செயல் என்று வெறுத்தார்கள்.

காரணம்?
இறந்து போனவர்கள் மீண்டும் அந்த நகரத்திற்குள் வந்தால் என்ன ஆகும்? பதவியிலிருந்து இறந்தவர்களின் பதவிகளை இப்பொழுதுள்ளவர் வகித்து வருகின்றார்களே! அதிகாரம் அவர்களுக்குப் போய் விடாதா? இறந்தவர்கள் சொத்தை பலர் எடுத்துக் கொண்டு வாழ்கின்றார்களே! இறந்தவர்கள் வந்தால் சொத்துரிமை போய் விடாதா? சுகங்களும் கூடவே செத்தொழியுமே! இறந்து போனவர்கள்