பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் இளமையாக வாழலாம்

27


வந்தால் கடன்களைக் கேட்பார்களே! ஆண்களில் சிலர் இறந்து போனவரின் மனைவிமார்களை கல்யாணம் செய்து கொண்டிருக்கும் ஆண்கள் பெண்கள் நிலை என்ன ஆவது? வயதாகிப் போனவர்கள் மீண்டும் கிழமாகி வந்தால், அவர்களை எங்கே தங்க வைப்பது? அவர்களை எப்படிக் காப்பாற்றுவது?

இப்படிப் பலப் பலப் பிரச்சனைகள் அவர்களை ஆட்டி வைத்து விட்டன. மாயாவியிடம்போய், பேசிய பணத்திற்கும் மேலே அதிகமாகக் கொடுத்துவிட்டு, அவனை ஊரைவிட்டுப் போகச் சொல்லி அப்புறப்படுத்திய பிறகுதான் அவர்கள் நிம்மதி அடைந்தார்கள், என்பதாக ஒரு கதையை எழுதிக் காட்டியிருக்கின்றார் ஒரு அறிஞர்.

மற்றவர்கள் இறந்து போவதற்காக மகிழ்வதும், கிழமாகிப் போவதற்காகக் களியாட்டம் போடுவதும் மனிதர்களின் இயற்கையான சுபாவமாகவே இருந்து வருகிறது. என்றாலும், முதுமை அடைவது என்பது தடுக்க முடியாத ஒன்று தான். இறப்பு என்பதும் இறுதியாக அடையக் கூடியதே என்பதும், தவிர்க்க முடியாத ஒன்று தான்.

ஆகவே, தவிர்க்க முடியாததுதான் முதுமையும் இறப்பும், ஆனால் முதுமையில் இளமையைக் காண்பது முடியாத ஒன்றல்ல. மனிதன் மனம் வைத்தால் நிச்சயமாக முடியும் என்பது தான் நமது வாதம்.

முற்காலத்தில் அதாவது ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்னதாக, மக்கள் அதிகமாக இறந்து போவதற்குரிய காரணங்கள் நோய்கள்தான். உதாரணத்திற்கு 1837ம் ஆண்டுக்கு முன்னர் மக்களின் சராசரி வாழும் வயது 35க்குள்ளாகவே இருந்தது. காரணம் பல கொள்ளை நோய்கள் தான். அதாவது அம்மை, காலரா, எலும்புருக்கி நோய், விஷக் காய்ச்சல், டிப்தீரியா போன்ற நோய்கள் எல்லாம்