பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

டாக்டர். எஸ் நவராஜ் செல்லையா


என்ன? காரில் தேய்ந்து போன உறுப்புக்களை மாற்றாமல், ஓட்டிக் கொண்டே போனால், முடிவு என்ன? இழந்தனவற்றிற்குப் பதிலாக புதியனவற்றைப் பொருத்தாமல் இருந்தால், இழப்பு இழப்புதானே! அழிவுதானே!

செல்கள் அழிந்து போனால், அவற்றைப் புதுப்பிக்கப் புது செல்களை உண்டாக்கப் பலமில்லாத தன்மையை உடல் பெறுகின்றபோது, உடல் முதுமையை அடைந்துபோகின்றது. ஆனால், ஏன் அந்த செல்கள் அத்தகைய நிலையை அடைகின்றன என்றால் யாருக்கும் தெரியவில்லை. என்றாலும் அவை இப்படித்தான் நிகழ்ந்திடவேண்டும் என்று எல்லோரும், அபிப்ராயப்படுகின்றார்கள்.

வளர்ந்து வரும் செல்களிடையே, கண்ணுக்குத் தெரியாத, புலன் உணர்வால் கூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்குத் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. அந்தத் தாக்குதல் இயற்கையாக இருக்கலாம் செயற்கை முறை தவறுகளாக இருக்கலாம். எப்படி இருந்தாலும், ஆரம்ப காலத்தில், அதாவது இளமைக்காலத்தில், இந்தத் தவறுகளால் ஏற்படும் தாக்குதல்கள் எல்லாம் செல்களின் பலத்தைப் பாதிப்பதில்லை, பழுதுபடுத்தி விடுவதில்லை. பேராபத்து எதையும் விளைவித்து விடுவதில்லை.

இளமை காலத்தில் எப்படித் தவறுகள் செய்தாலும், இயற்கைக்கு எதிராகத் தகராறுகள் செய்தாலும், செல்கள் தங்களை பத்திரப்படுத்திப் பாதுகாத்துக் கொண்டு, பிரிந்து வளர்ந்து, உடலை செழிப்படையச் செய்து கொண்டே வருகின்றன. ஆனால், தவறுகள் நிறைய குவிந்து விடும்போது தாள முடியாத செல்கள், தங்கள் பலத்தை இழந்து, இயற்கை வளர்ச்சியை, பிரிந்து வளரும் எழுச்சியை இழந்து விடுகின்றன.