பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் இளமையாக வாழலாம்

41


குறையவில்லை. ஆனால் அவனது தசைகள் மட்டும் அந்த வேகத்துடன் செயல்படும் திறமைகளில் கொஞ்சம் இழந்து விட்டிருக்கின்றன.

அவனால் அதிகமாக எண்ண முடிகிறது. ஆனால் எண்ணத்தின்படி செயல்பட முடியவில்லை. தசைகளில் ஏதோ ஒரு தேக்கமான இயக்கம். தொடர்ந்து தீவிரமாக இயங்கிய உடலுறுப்புக்களில். ஏதோ ஒரு தடைப்பட்டுத் தாமதமாகக் கிளம்புகின்ற செயல்கள். ஏன்!

இன்னும் 5 ஆண்டுகள் போகின்றன. அனுபவங்கள் கூடுகின்றன. குத்துச்சண்டையின் குதர்க்கங்கள், தந்திரங்கள், அற்புத யுக்திகள் அனைத்தும் அவனிடம் நிலைக்கின்றன. ஆனால், அந்த உடலின் வேகம் உணர்வுகளுக்கு ஈடுகொடுக்க முடியவில்லையே. ஏன்?

நினைக்கிறான். ஆனால் அதன்படி நடக்க முடியவில்லை. இதைத்தான் முதுமையின் தொடக்கம் என்கிறார்கள். குத்துச்சண்டை வீரன் முப்பது வயதிற்குள்ளே இதுபோன்ற ஒரு முதுமைத் தன்மையை அடைந்து விடுகிறான்.

குத்துச் சண்டையைவிட, மல்யுத்தம் சற்று கடுமை குறைந்த திறமையைக் கொண்டதாகும். இதில் ஈடுபடும் வீரர்கள் இன்னும் கொஞ்சம் காலம் தாக்குப்பிடிக்கின்றார்கள். இன்னும் ஓர் ஐந்து வயதுவரை ஆற்றல் குறையாமல் போரிடும் இளமையைப் பெற்றுக் கொள்கின்றார்கள்.

இன்னும் கடுமை குறைந்த விளையாட்டுக்களில் ஈடுபடுவோர். அதாவது பூப்பந்தாட்டம், டென்னிஸ் போன்றவைகளில் பங்குபெறுவோர். உடல் வன்மையை அதிகம் மேற்கொள்ளாத காரணத்தால், அருமையாக இளமைத் தன்மையுடன் விளையாடிக் கொள்கின்றார்கள்.