பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

டாக்டர். எஸ் நவராஜ் செல்லையா


இதிலிருந்து நாம் ஒரு கருத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். சாதாரண ஒரு மனிதன் 58 அல்லது 60 வயதில், தான் செய்யும் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறான். அது அவனை வயோதிகனாக சமுதாயத்திற்குத் தனித்துக் காட்டுகிறது.

ஆனால் 30 அல்லது 35 வயதில், தான் செய்யும் தொழிலிலிருந்து ஓய்வு பெறுகிறான் ஒரு குத்துச் சண்டை வீரன். அதற்குப்பிறகு, அவன் சமுதாயத்திலிருந்து ஓய்வு பெற்ற வயோதிகன் போல் தான் ஒதுக்கமாகக் காணப்படுகிறான்.

இரண்டு நிலையாளர்களுமே உழைக்கும் தொழிலில் ஓய்வு பெற்றுக் கொள்கின்றார்கள். ஓய்வு பெறுவது என்பது கடுமையான குற்றமுமல்ல. வரக்கூடாத வம்பும் அல்ல. அது இயற்கையின் சட்டம்.

வளர்ந்துக் கொண்டே வரும் இயற்கைச் சூழலில், மனிதன் வளர்ந்து கொண்டேதான் வரவேண்டும். அதுதான் முறை, அந்த முறையை அனுசரித்துப் போகவே, மனத்தினை நாம் மடக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஓய்வு பெறுகின்றவர்களின் மனநிலைதான் மற்ற எல்லா துன்பங்களுக்கும், புரியாத மயக்கங்களுக்கும் காரணமாகும்.

30 வயதிலே ஓய்வு பெறும் குத்துச்சண்டை வீரன், அவனுக்கு ஆர்ப்பாட்டமான புகழ், அளவில்லாத வருமானம். புரட்டிய பத்திரிகையின் பக்கத்திலெல்லாம் அவனது புகைப்படம். போகுமிடங்களெல்லாம் ரசிகர்கள் கூட்டம். புகழ்மாலை, புன்னகை வரவேற்பு, ஆரவாரக் கூச்சல்.

தொழிலில் இருக்கும்போது இத்தனை சுகம், இத்தனை இதம் இதிலிருந்து விடுபடும் போது, வேறு ஒருவன் வந்து