பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

டாக்டர். எஸ் நவராஜ் செல்லையா


கொள்ள கொள்ள வேண்டும்? மனதைக் கட்டுப்படுத்தி, மகிழ்ச்சியாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும். எப்படி?

“என் வாழ்நாளில் நான் வாழ்ந்தவரை நன்றாகவே வாழ்ந்திருக்கிறேன். மற்றவர்களும் என்னைப் போல் வாழ, நான் வழிவிட்டாக வேண்டும் அவர்கள் வாழ்கின்ற இனிய நிலைகளை தான் அனுமதித்து, முடிந்த வரை உதவத்தான் வேண்டும். விலகத்தான் வேண்டும். நான் ஓடிய வாழ்க்கை ஓட்டம் முடியவில்லை. இன்னும் ஓட வேண்டிய தூரம். அடைய வேண்டிய இடம் வேறு பல இருக்கின்றன. அதற்காக, எனது திறமைகளையும் கடமைகளையும், சக்திகளையும் ஒன்று சேர்த்து பாடுபடுவேன், பலன் பெறுவேன்” என்று ஒருவர் நினைத்துவிட்டால், கவலைதான் வருமா? முதுமைதான் எழுமா?