பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முன்னுரை

இளமையாக இருக்க வேண்டும் என்பது எல்லோருக்குமே ஆசைதான்.

இளமை எல்லோருக்கும் வருகிறது. வசந்தமாய் வீசுகிறது. பேரின்பமாய் பேசுகிறது. பெருமிதத்தையும் பூசுகிறது.

ஆனால், வந்த இளமையை சொந்தம் பாராட்டி, சொகுசுடன் சீராட்டி, வேண்டிய அளவுக்குத் துய்த்து விரைவில் தீர்த்து விடுகின்ற மனப்பாங்குதான் மக்களிடையே மகோன்னத ‘வெறியாய்’ மேலோங்கியிருக்கிறது.

இளமைக்கான இன்பமும் வேண்டும், இளமையும் தளர்ந்து போய்விடக் கூடாது’ என்று எண்ணுவோரே இளமையை அனுபவிக்கிறார்கள். ஆனந்தம் பெறுகின்றார்கள். இளமையைக் கட்டிக்காத்துக் கொண்டு களிப்படைகின்றார்கள்.

எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதில் அல்ல பெருமை, எவ்வளவு சேர்த்து வைக்கிறோம் என்பதில் தான் எதிர்கால மேன்மைகள் சதிராட்டம் போடுகின்றன. தேகத்திற்கும் இது பொருந்தும். தேகத்திற்குரிய சக்தியை செலவழிக்கிறோம். அது உரிமை என்றால், அதற்குரிய சக்தியை மீண்டும் சேர்த்துக் கொடுப்பதும் கடமைதான் என்ற சிறு குறிப்பைத் தான் நம்மவர்கள் மறந்து போகின்றார்கள்.

அல்ல அல்ல! தெரிந்தும் நழுவிக்கொள்கின்றார்கள், நழுவிக் கொள்வதால் நலங்கள் பாதிக்கப்படுவதுடன், நல்ல உடல் தோற்றமும் நலிவுக்கு ஆளாகிப் போகின்றன என்பதையும் அவர்கள் உணராமலில்லை, அப்படி ஓர்