பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

டாக்டர். எஸ் நவராஜ் செல்லையா


ஏறிக் கொண்டிருக்கும் வயதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். மாறிக் கொண்டு வரும் உடல் தோற்றத்தையும் மனப்பூர்வமாக அங்கீகரித்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.

ஆகவே, வயதாவதைப் பற்றிய வீண் மனப் புரளியை முதலில் விரட்டியடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

நமக்கு வயதாகி விட்டால், மற்றவர்கள் விரும்பமாட்டார்களே, மதிக்க மாட்டார்களே என்ற கற்பனை பயத்தைக் கனவிலும் கருதாதீர்கள்.

பூவும் கனியும்

ஒரு மரத்தில் பூத்த மலர் காயாகிறது என்றால் கனியாவதையும் மக்கள் விரும்புகின்றார்களே! அது ஏன்? பழம் பயன்படும் என்பதால் தான்.

ஒருவருக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது என்றால், அவர் அனுபவப் பழமாக அறிவுக்கனியாக அல்லவா விளங்குகிறார்!

வெம்பிப்போன காயையும் கனியையும் தான் மக்கள் வெறுப்பார்கள். அதுபோலவே, வீணாகிப் போன வயதானவர்களைத் தான் மற்றவர்கள் விலக்குவார்கள். விவேகம் உள்ளவர்களை ஏற்றுக் கொள்வதோடு, போற்றி வாழ்வது என்பது காலங்காலமாக வரும் சமுதாய தர்மம்.

ராமன் கீமன், மாடு கீடு, என்றெல்லாம் பலர் கேலியாகப் பேசுவது உண்டு. அதாவது ‘கீ’ எனும் எழுத்தைக் கூட்டிச் சொல்வது. அதாவது நல்லவார்த்தைக்கு மாறாகப் பேசும் கேலி முறை இது.

வயதில், அறிவில், உருவில் உயர்ந்து ஜொலிப்பவர்களைப் ‘பழம்’ போன்றவர்கள் என்று கூறுவது