பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் இளமையாக வாழலாம்

81


மரபு. ஆனால் ‘கிழம்’ என்று கூறுகின்றார்களே! யாரை? ஒன்றுக்குமே பயன்படாத உதவாதவர்களைத்தான்.

பண்பட்டவர்களை, பயன்படுபவர்களைப் பழுத்த பழம் என்கிறார்கள். பயன்படாத முதியவர்களைத் தான் கிழம் என்கிறார்கள்.

வயதாகும் பொழுதே, நாம் பழமாகப் போற்றப்பட வாழ்வதற்கு நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டாமா?

வெறுங்கல்லை யார் மதிப்பார்கள்! துதிப்பார்கள்! ஒருகல் விரும்பப்படும் சிலையாவதற்கு எத்தனை சிரமங்களை ஏற்றுக் கொள்கிறது.

வயதான காலத்தில் நாம் நமது குடும்பத்திற்கும் நமது சமுதாயத்திற்கும், நமது தாய் நாட்டிற்கும் உதவுவதுபோல் வாழ்ந்து கொண்டிருந்தால்தானே மற்றவர்கள் மதிப்பார்கள்!

இதற்கும் இளமைக்கும் என்ன சம்மந்தம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

ஆஸ்பர்ன் செகன்பர்க் என்ற ஆராய்ச்சி நிபுணர் ஒருவர், 1200 கிழவர்களை அதாவது நூறு வயதுக்கும் மேற்பட்டவர்களை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார். அதாவது, “ஒருவர் தாம் செய்கின்ற வேலையில் மகிழ்ச்சியும் மன நிறைவும், மீண்டும் மீண்டும் செய்கின்ற மன உறுதியும் உள்ளவரே நீண்ட ஆயுளுடன். நல்ல இளமை உணர்வுடன் வாழ்கின்றார்கள்” என்பது தான் அவரது கண்டுபிடிப்பு.

இங்கு மனம் தான் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அடுத்து, வயதாகி விடுவதாலே, மற்றவர்கள் நம்மை விலக்கி விடுவார்கள். மற்றவர்களுடன் உள்ள தொடர்பு