பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் இளமையாக வாழலாம்

85


போய் நலிந்திடும் மானிடர்கள்தாம், இவ்வாறு நோய்களால் தாக்குண்டு நொறுங்கிப் போய் கிடக்கின்றனர்.

அதாவது நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தது போல, உடல் இயற்கையாக முதுமை அடைவதைக் காட்டிலும், நோய்கள் தான் முதுமை அடைவதைக் கரம்கூப்பிக் கூட்டிக் கொண்டு வந்து நிற்கின்றன.

நோயைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் Disease. அதைப் பிரித்தால் Dis+Ease என்று ஆகிறது. Ease என்றால் உடலுறுப்புக்கள் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்பட்டு, சகஜமான சூழ்நிலையில் செளகரியமாக பணிபுரிவது என்பது அர்த்தம்.

Disease என்றால் அதற்கு மாறுபட்ட அர்த்தமாகும். தமிழிலும் நோய் என்றால் துன்பம் என்பதுதான் பொருள். உடன் உழைக்காத உறுப்புக்களில் ஓர் உறுப்பு ஒன்று, முரண்பாடு கொண்டு போவதால் துன்பம் தோன்றுவது இயற்கை தானே.

இயற்கையாகவே வயதாகிப் போவதால், முதுமை வரும்போது கூடவே தோன்றும் அறிகுறிகளை நாம் மூன்று வகையாகப் பிரிக்கலாம்!

நோய் மூன்று வகை

நரம்பு மண்டலம் தளர்ச்சியடையும் போது நடுக்கம் ஏற்படுகிறது. கைகள் நடுங்கத் தொடங்கி, கழுத்தும் நடுங்கி, கால்களும் தள்ளாடி இப்படி ஒரு நோய்.

ஏதாவது தசைகளைப் பயன்படுத்தி ஒரு காரியம் செய்யும்பொழுது கைகால்கள் நடுங்குவதை நாம் காணலாம். இன்னும் ஒன்று. ஏதோ ஒரு பண்டம் வாயில் இருப்பதை போன்று மெல்லுவதுபோல, வெறும் வாய் அசைந்து,