பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

டாக்டர். எஸ் நவராஜ் செல்லையா


உடல்நிலையோ முழுவதும் பலஹீனம் நிறைந்ததாக இருப்பதால், மூட்டுகள் நெகிழுந் தன்மையை இழந்து, விறைப்பாகக் கட்டை போலாகி விடுகின்றன. அதனால்தான், வலி குறையாது. நோயும் வளர்ந்து கொண்டே போகிறது.

முதிய உடம்பில் உடலுறுப்புக்களின் ஒற்றுமையின்மை அதிகமாகிப் போவதுதான் முக்கிய காரணம் என்பதும், முளைக்கின்ற நோய்களுக்கு எதிர்ப்பு குறைந்திருப்பதாலும் நோய்கள் எளிதாகத் தங்கள் ஆளுகையை விரிவுபடுத்திக் கொண்டே போகின்றன.

நோய்களின் பட்டியல்

அதிகமாக முதிய உடம்பில் ஆதிக்கம் செலுத்தவரும் சில நோய்களின் பட்டியலைப் பாருங்கள்.

புற்றுநோய்; உடம்பில் உள்ள சிவப்பணுக்கள் குறைந்து வெள்ளை அணுக்கள் மிகுதியாகும் கொடுமை. இந்த வியாதி எந்த வயதினருக்கும் வரலாம் என்றாலும், வயதானவர்களுக்கே அதிகம் வருகிறது என்று கூறுவாரும் உண்டு.

தோலில், உதடுகளில், வாயில், நாக்கில், நுரையீரலில், வயிற்றில், மார்பகத்தில், பெண்கள் பிறப்புறுப்பில் இன்னும் பல இடங்களில் உண்டாகும் புற்றுநோய் வகைகள் பல உண்டு. எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

அடுத்தது எலும்புருக்கிநோய் இளைஞர்களுக்கு இது ஏற்படும் போது, காய்ச்சல் வரும். உடல் எடைகுறையும். களைப்பு மேலிடும். இந்த அறிகுறிகளைக் கண்டுபிடித்து, சிகிச்சை செய்து எளிதில் குணப்படுத்தி விடலாம்.

ஆனால் முதுமைக் காலத்தில் விரைந்து வரும் இந்நோய், மேலே கூறிய அறிகுறிகள் அதிகமாக வெளிப்படாமல்