பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

டாக்டர். எஸ் நவராஜ் செல்லையா


உயரத்தின் அளவு குறைகிறது. தொங்கும் கன்னத்து சதைகள், ஒடுங்கிப் போகவும் செய்கின்றன.

முதுகு வளைந்து கூன் விழுந்து போகிறது.

மார்பு கூடுகட்டிக் கொள்கிறது மூட்டுகள் விறைப்புத் தன்மை அடைகின்றன.

தோல் சுருங்கி வரி வரியாக வளையம் கொள்கிறது.

முடி விழுந்து வழுக்கையாகிறது. இருந்தால் நரைத்துப் போகிறது.

விழியில் உள்ள லென்ஸ் விறைப்புத் தன்மை பெற்று, பார்வையின் நுண்மையைப் பறித்து விடுகிறது.

காதுகளும் மூக்கும் தமது நிலையான வடிவத்திலிருந்து மாறி, வளர்ந்து அவலமாகக் காட்சியளிக்கின்றன.

தலையின் அளவும் விரிவடைந்து விடுகிறது.

சாதாரணமாக நோய் தாக்கினாலும் அகப்பட்டுக் கொள்ளும் அசட்டு நிலைக்குத் தேகம் வந்துவிடுகிறது.

நடுத்தர வயது வரை உடல் எடை ஏறிக்கொண்டே போய், 50 அல்லது 55 வயதுக்கு மேல் எடை குறைந்து வரத் தொடங்குகிறது.

உட்புறமாற்றங்கள்:

பாதிக்கப்படும் உட்புற முக்கிய உறுப்புக்கள் 1.நுரையீரல்கள், 2. இதயமும் இரத்த ஓட்டமும்.

இதனை கொஞ்சம் விஞ்ஞானப் பூர்வமான விளக்கமாகத் தெரிந்து கொள்வோம்.

1. சுவாசமும், சுவாசப்பைகளும்

சுவாசம் இழுப்பதும் வெளிவிடுவதும் தான். மனிதர்க்கு முக்கியமான செயலாகும். இந்த சுவாச அவயவங்களில் தான்