பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் இளமையாக வாழலாம்

95


பிராணவாயு உடல் முழுதும் போய்ச்சேருகிறது. உடலிலுள்ள திசுக்களுக்கு பிராணவாயு சேர்ந்துவிட, அங்கிருந்து கார்பன்டை ஆக்சைடு எனும் கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு நுரையீரலுக்கு வர, அங்கிருந்து மூச்சு விடுவதன் மூலம் கெட்டக்காற்று வெளியேற்றப்படுகிறது.

வெளிக் காற்றிலிருந்து பிராணவாயுவை எடுத்துக் கொள்வது சாதாரணமாக 21 சதவீதம் (பிராணவாயு) என அமைகிறது. இது ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. அதாவது, வெளிக் காற்றினை உள்ளுக்கு எவ்வளவு இழுக்கிறோமோ, அவ்வளவு சதவிகிதம் பிராண வாயுவை அதிகமாகவே பெறமுடிகிறது.

நுரையீரல் விரிவடைவதற்கும், மீண்டும் சுருங்கி வருவதற்கும் உதரவிதானமும் (Diaphragm) அதற்கும் மேற்புறம் அமைந்துள்ள விலா எலும்புகளும் (Ribs) அவற்றைச் சார்ந்த தசைகளுமே காரணமாகவும் அடிப்படை ஆதாரமாகவும் விளங்குகின்றன.

ஒருவர் உடற்பயிற்சி செய்யும் பொழுது, மார்புப்பகுதி விரியும்போது, நுரையீரலுக்குள் நிறைய காற்று உள்ளே புக நேரிடுகிறது. ஏனெனில் நுரையீரலில் காற்று புகப் புக, நுரையீரல் விரிந்து கொண்டு ஏற்கும் அளவுக்கு (மார்பு விரிவதால்) இடம் கிடைக்கிறது.

வெளிப்புற அழுத்தத்தின் விளைவாக, மூக்கிற்குள் காற்று நிறையப் புகுகிறது. பிறகு மூச்சை வெளியேவிட நுரையீரல் மார்புத் தசைகள் போன்றவை உட்புறமாக அழுத்தித்தான் வெளியே அனுப்புகிறது.

அதாவது உட்புற சுவாசம் வெளிப்புற அழுத்தத்தால் நடக்கிறது. வெளிவிடும் மூச்சோ உட்புறத் தசைகள் வலிவோடு இயங்கும்போது நடக்கிறது. இது, உடலானது