பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் இளமையாக வாழலாம்

97


பெற்றுக் கொள்ள முடிகிறது. அதிகமான காற்றை வெளியேற்றும் பொழுது, கொஞ்சம் குறைவான கரியமில வாயுவே உள் தங்க நேரிடுகிறது.

அப்படி ஆற்றலுடன் விளங்கச் செய்வதுதான் உடற்பயிற்சி செய்பவர்கள் பெறுகின்ற தனித் தன்மையாகும்.

ஒருவருக்கு வயதாகும் பொழுது, நுரையீரலில் காற்றைப் பெறுகின்ற ஆற்றல் குறைகிறது. காரணம் நுரையீரல் அதிகமாக செயல்படாமல் போவதுதான் அதற்குக் காரணம். அந்த மனிதர்கள் உழைப்பில் அல்லது உடற்பயிற்சியில் ஈடுபடாததுதான் முக்கிய காரணமாகும்.

நல்ல உழைப்பில் அல்லது பயிற்சியில் ஈடுபடுபவர்களின் நுரையீரல் நன்கு செயல்பட உதவுகின்றன. கொஞ்சங் கொஞ்சமாக அதன் செயல் வேகம் குறைவதை இடையில் தடுத்து நிறுத்த, அவரது உடற்பயிற்சியானது உதவுகின்றது.

சுறுசுறுப்பான, நிறைய சுவாசம் பெறுகின்ற நுரையீரல், நிறைய ஆற்றலைக் கட்டிக் காத்துக் கொள்கிறது என்பதுதான் இளமையின் ரகசியமாகும்.

சரியான வேலையின்மை, சுத்தமில்லாத காற்றை சுவாசித்தல், நுரையீரல் பாதிப்பு, மற்றும் நோயால் தாக்குண்டு கிடத்தல் போன்ற காரணங்களால், நுரையீரலின் வேலைகள் சரிவர நடைபெறாமல் போவதால், எதிர்பார்த்ததற்கு சீக்கிரமாகவே, முதுமை வந்து உடலை மூடிக்கொள்கிறது.

நுரையீரலைப் பாதிக்கும் நோய்களில் முக்கியமானவை எம்பிசீமா (emphysema); பிரான்கிட்ஸ் (Bronciaits) என்பனவாகும்.

எம்பிசீமா நோய் வந்தால் நுரையீரல் காற்றை பெறுவதையும் வெளியிடுவதையும் தடைசெய்கிறது.