பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று எண்ணி மகிழ்வேன். விளையாட்டுத்துறை பற்றி இலக்கிய நூல் வரிசையில் இந்நூல் எனது மூன்றாவது படைப்பாகும். . பிறந்த ஒவ்வொருவரும் புகழுடன் வாழ வேண்டுமென்று விரும்புகிறார்கள், முயற்சிக்கிறார்கள் என்றாலும் செயல்படுபவர்கள் சிலரே. எப்படியும் வாழ்ந்து விடலாம் என்று துடிப்பவர்களுக்கும், இப்படித்தான் நாம் . வாழவேண்டுமென்று வரையறுத்துக் கொண்டு : வாழ்பவர்களுக்கும் அடிப்படையாக அமைந்திருப்பது : உடல்தான். o உடல் வளமாக இருந்தால் தான் உலக வாழ்க்கையை ரசிக்க முடியும். இன்ப உணர்வோடு சுகிக்க முடியும் உடலுக்கு வந்த பிறகு தடுப்பதைவிட மருந்தாலும்! ஊசியாலும் உடலைக்கெடுப்பதைவிட, வருமுன் காக்கின்ற 臺 o பெருந்தகையினராக வாழ முற்படுவோருக்கு, நல்ல . வழிகாட் டியாயப் அமையவே இந் நூால எழுதப் பெற்றிருக்கிறது. உடலழகுப் பயிற்சிகளின் உன்னத விளைவுகளை உலகத்தார் உணர வேண்டும். உண்மையினைத் தெளிய வேண்டும், உணர்ந்த வழி செயல்பட வேண்டும் என்ற என் நோக்கம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற . நம்பிக்கையிலே, இந்நூலை உங்கள் கையில் அளிக்கிறேன். . உடலழகு பயிற்சியின் உயர்ந்த கொள்கையினை விளக்கமாகவும் செயல்படவேண்டிய முறையினை o o: இயக்கமாகவும் பிரித்துத் தந்திருக்கிறேன். . o எழுச்சியுள்ள இளைஞர் சமுதாயம் இன்றைய . நாட்டுக்குத் தேவை. இந்நூல், அத்தேவையை: நிறைவேற்றுமானால், என் முயற்சியும் வெற்றி பெற்றது -