பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்

  • ...*...*

6)6Ն)ԱIII - Too- __ - **** _ _. جمعیت --> பரவி, கைகளைச் சுற்ற இயக்க எல்லா வழிகளிலும்! இதமாகப் பயன்படுகிறது. (ஈ) மார்பு: (Chest) : மனிதனுக்கு அழகையும் கவர்ச்சியையும் தருகின்ற மார்புத் தசைகள், தோள் பகுதியிலிருந்து இறங்கி, வயிற்றுக்கு மேலேயே முடிந்துவிடுகிறது. இறுக்கமாகவும், எழிலாகவும் இம் ! மார்த் தசைகள் பயிற்சிகளால் பக்குவமாக உருவாக்கப்படுகின்றன. உடலுக்குரிய முக்கியமான தசைகளில் இதுவும் ஒன்று. - மனிதன் நிமிர்ந்து நிற்கவும் தன் உடலைப் பார்த்து தன்னம்பிக்கை கொள்ளவும் இத் தசைகள் : உதவுகின்றன. (உ) இடுப்பு : குறுகிய துண்டு தசை, 1 மார்பெலும்பிலிருந்து அடி வயிறு வரை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கமாக இடையிலே பரவியிருக்கிறது. | இடுப்பை முன்னால் வளைக்கவும், இடுப்புக்குரியதான 1 முதுகெலும்பை நிமிர்த்தி வைக்கவும் இத் தசைகள் பயன்படுகின்றன. (ஊ) தொடை (Thigh) ; இடுப் பின் பின்புறத்தை (Buttocks) உருவாக்கி அதிலிருந்து தொடங்கி, முழங்கால் வரை முன்னும் பின்னும் பரவியுள்ளது. உடலிலே அதிக சதை நிறைந்த பாகமான இத்தசைகள், முழங்காலை விறைப்பாக வைக்கப் பயன்படுகின்றன. தொடையின் முன்புறமுள்ள நான் கு தசைகள் முழங் கால வரையிலும் ஊடுருவியிருக்கின்றன. நடக்கவும், உடலை நேராக வைத்திருக்கவும் தொடைத் தசைகள் உதவுகின்றன. (எ) கெண்டைக்கால் தசை (Calf) பின்புற முழங்காலுக்கு கீழே உள்ள, பெரிய பருத்த சதைப் பற்றுள்ள தசைகளே கெண்டைக்கால் தசைகளாகும். இவைகள் கணுக் காலை (Ankle) விறைப்பாக : வைத்திருக்கின்றன. அதன் தசை நரம்புகள் குதிகால் வரையிலும் நீண்டு அதே பயனைத் தருகின்றன. இத்தசைகள் கணுக்காலை மடக்கவும் திருப்பவும் ! A பயன்படுகின்றன. o