பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EIIât—II—5Isè.—IbôIIII; --- - o “” i. ఓ-ఱ அணிந்துரை - தள்ளாத வயதில் எஞ்சி நிற்பது சரீரம் ஒன்றுதான் என்பது சான்றோர் வாக்கு. அந்த எஞ்சி நிற்கும் சரீரம் நோயின்றி ஆரோக்கியத்துடன் இருத்தல் மிகவும் | முக்கியமல்ல்வா? ஆணும் பெண்ணும் போற்றும் ஆண்மகனாக வாழ்வதும் மிகவும் முக்கியம். ஆண்ட்வன் மிகவும் அழகான உடல் அமைப்பை ஆணுக்கும் பெண்ணுக்கும் கொடுத்திருக்கிறாள். அதைக் காப்பாற்றிச் செயலாற்ற வேண்டியது நமது முக்கிய கடமை. தன்னோடே பிறந்து தன்னோடே வாழ்ந்து, தன்னோடே மறையும் இந்த உடலைக் காட்டிலும், நமக்கு அழகானது எதுவும் கிடையாது. மனிதனின் உடல் : ஒரு அழகான கடிகாரம் நாம் அதை நல்ல முறையிலே | வைத்துக்கொண்டு காப்பாற்றினால், சரியான மணியைக் | | காட்டும். தவறாக உபயோகித்தால் மரணம் என்ற அலாரம் வெகு சீக்கிரத்தில் அடித்து விடும். ஆகவே, நமது உடலைக் காப்பாற்றிக் கொள்வதில் நேர்மையாக நடந்து கொள்வதும், நல்ல ஆகாரங்கள் சாப்பிடுவதும் மட்டும் போதாது. தேவையான உழைப்பும் தேவை. அன்றாடம் நாம் நம் சரீரத்திற்குக் கொடுக்கும் சாதாரண வேலையால் மட்டும், உடலுக்கு வலுவும் வனப்பும் வந்து விடாது. உடலின் உறுதிக்கும் வனப்பிற்கும் ஏற்ற பல பயிற்சிகளைச் செய்து தான் ஆக வேண்டும். பரதக் கலை, நாடகக்கலை, சித்திரக்கலை, சிற்பக்கலை போன்ற பழம் பெரும் கலைகளில் ஒன்று தான் இந்த உடற்பயிற்சிக் கலையும். தொன்றுதொட்டு இந்த உடற்பயிற்சிக் கலை (தேகப்பயிற்சி) இருந்து வந்தாலும், சமீபகாலமாகத்தான் இது மிகவும் நல்ல முறையிலே முன்னேற்றம் கண்டு உள்ளது. இந்த