பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்._நவராஜ் செல்லையா BS - 2. எடை 6Jfbģ6 (Bar Bell) 4 அல்லது 6 அடி நீளமும் ஒரு அங்குல விட்டமும் உள்ள கடப்பாரை (Bar) போன்ற ஓர் ! இரும்புக் கம்பி: அதன் இருபுறமும் இரும்புத் தட்டுக் களை (Discs) மாட்டி வைக்கக் கூடிய அளவுக்குத் தடுப்பான்களும் (Collars), தட்டுகள் : | மாட்டிய பின் விழாதிருக்க, இறுக்குகின்ற மரைகளும் (Screws) கொண்டிருக்கும் பயிற்சிச் சாதனத்தையே நாம் எடை ஏந்தி என்கிறோம். எடைக்கான இரும்புத் தட்டுக்களின் எடைகள் | 5 பவுண்டிலிருந்து தொடங்கி 50 பவுண்டுகள் வரை இருக்கும். - பயிற்சிப் பள்ளியிலோ, பூங்காவிலோ சென்று : பயிற்சி செய்வோருக்கு, பயிற்சி சாதனங்கள் அங்கேயே கிடைக்கும். ஆனால், தங்கள் வீட்டிலேயே இருந்து, ! பயிற்சி செய்ய விரும்புவோர், எவ்வளவு எடைகள் : வாங்கவேண்டும் என்ற ஓர் கேள்வியை எழுப்பலாம். அது அவர்கள் பொருளாதார வசதியையும், எடை தூக்கும் உடல் திறனையும் பொறுத்திருக்கிறது. ஆனால் அவர்கள் குறைந்த அளவாவது வாங்கத்தான் வேண்டும். அந்த அளவு 100 பவுண்டுக்கும் குறையவே கூடாது. தொடக்கத்தில் அந்த எடை அவ்வளவு தேவைப்படாவிட்டாலும், நாளாக நாளாகத் தேவைப் படும். அந்த எடைகள் : எடைப்பயிற்சிக்கு மட்டும் போதும், பளு தூக்கும் ! பயிற்சிகளுக்குப் போதாது. வேண்டும் போது மீணடும் : வாங்கிக் கொள்வதே சாலச் சிறந்தது. o