பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

() டாக்டர்.எஸ்.நவராஜ்செல்லையா

போய்க் கொண்டிருப்பவர்கள். தங்களுக்குள்ளே தர்க்கித்துத் தளர்ந்து போகிறவர்களைப் பற்றி, சிரஸ் என்னும் மேல் நாட்டு அறிஞர் இப்படிக் கூறுகின்றார்.

முடிவெடுக்காமல் இருப்பதினாலேயே வெற்றி பெறுகிற பல சந்தர்ப்பங்களை நாம் அடிக்கடி இழந்து போகிறோம். என்பதுதான்.

சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருப்பவன் சாதாரண மனிதன். சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு நடந்து கொண்டு சமாளிப்பவன். சாதுர்யமாக வெற்றி பெறுபவன் நடுத்தர மனிதன். ஆனால் சந்தர்ப்பங்களை உண்டுபண்ணிக்கொண்டு, சாகசங்கள் புரிந்து, வெற்றி பெறுகிறவன் விவேகி அறிவாளன். வாழ்க்கையில் முன்னேறவும், வளமார்ந்த வாழ்வு வாழுகிற பேறு பெற்றவன் என்றே நாம் கூறலாம்.

ஆகவே, சாமார்த்தியசாலியாக நீங்கள் வளர வேண்டும் என்று எண்ணுகின்றீர்கள் அல்லவா! அதுவே அருமையான ஆரம்பம்.

சாமார்த்தியமும் சாதனை புரியும் திறமும் அதற்கேற்றத் தீரமும் பெறுவது என்பது சாதாரண காரியமல்ல. புகழ் பெறுவதும் பெருமை பெறுவதும் எளிதான காரியமல்ல. புகழ் பெறுவதற்கான பாதையானது மலர்கள் பரப்பியிருக்கும் மனோகரமான மஞ்சமல்ல என்கிறார் லான்போன்டெயின் என்கிற மேல்நாட்டு அறிஞர்.

அத்தகைய அரிய நிலையை சாதனை புரிய வேண்டும் என்று விரும்புகின்ற மனதை, எல்லோரும் உணர வேண்டும். உண்மையான உற்சாகமான ஊக்கமுள்ள ஒருவர் எப்பொழுதும் என்னால் முடியாது என்று சொல்லவேமாட்டார் என்கிறார்