பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களும் உயரமாக வளரலாம் 1()

கோதே என்பவர். ஆகவே நீங்களும் முடியாது என்று சொல்ல மாட்டீர்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஏனெனில், நீங்கள் (ք գակւն என்றல்லவா நினைத்திருக்கின்றீர்கள், முயன்றிருக்கின்றீர்கள், செயல்பட முன் வந்திருக்கின்றீர்கள் நம்மால் நிச்சயம் வளர முடியும் என்று எண்ணுகின்ற நீங்கள். நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்று

வாளா இருந்துவிடக் கூடாது.

காலம் பொன் போன்றது. கடமை கண்போன்றது. என்று அலுவலக அறைகளில் எழுதி போட்டுக் கொண்டு, வீணாக பலர் கூடி அரட்டை அடித்துக் கொண்டு, வேலையை செய்யாமலேயே விதண்டாவாதம் பண்ணியவாறு இருப்பவர்களையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த நிலைக்கு நீங்கள் போகமாட்டீர்கள். ஏனென்றால் என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் அல்லவா இன்று நீங்கள் புறப்பட்டிருக்கின்றீர்கள்.

மனிதனது தேவ துரதனாக காலம் இருக்கிறது என்கிறார் வீலர் என்பவர். தேவ துாதுவனை நாம் அலட்சியம் செய்யலாமா? எத்தனை எத்தனையோ இனிய செய்தியினை ஏந்திக்கொண்டு வரும் தேவ துாதனை நிராகரிக்கலாமா!

நிராதரவாக்கிவிட்டு நேர்மையில்லாத செயலில் ஈடுபட்டு முன்னேற்றத்தைப் பாழடித்துக் கொள்ளலாமா

ஆகவே நிச்சயம் முடியும் என்ற நம்பிக்கையுடன் நடைபோடுமாறு உங்களை அழைக்கிறேன். ஒருவன் வாழ்க்கையில் உண்மையாகவே எப்பொழுதுதோல்வி அடைகிறான் என்றால் தான் கொண்டிருக்கின்ற கொள்கையையும் கோட்பாட்டினையும் குறிக்கோளையும் மறந்து விட்டு வெற்றி