பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 5 டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா

இருப்பவர்களைப்பற்றி கிண்டலாக மட்டுமல்லாமல் சற்று கேவலமாகவும் பழமொழி ஒன்றை உண்டாக்கிப் போயிருக்கின்றார்கள் முன்னோர்கள். அதுவும் நீங்கள் அறிந்த பழமொழியாயிற்றே கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே என்று.

குள்ளமாக இருப்பதால் மட்டும் வாழ்க்கையில் முன்னேறிவிட முடியாது என்று இல்லை குள்ளமாக இருந்தவர்கள் மக்கள் உள்ளங்களை மட்டுமல்ல. மாநிலங்களை ஆண்டதாகவும் சரித்திரங்கள் கூறுகின்றனவே இயற்கையை நாம் குறை கூறிவிட முடியாது என்றாலும், முயன்றால், நாமும் ஒரளவு உயரலாம் என்று சரித்திரங்கள் கூறுகின்றன என்பதால், நாமும் அந்த நம்பிக்கையில் தொடர்ந்து முன்னேறுவோம்!

நம் காலத்திலேயே சரித்திரம் படைத்து, சாதனைகனை சமர்ப்பித்து, சமுதாயத்திலே சக்ரவர்த்திகள் போல வாழ்ந்தவர்களை நாம் பார்த்திருக்கிறோம். அவர்கள் உயரத்தால் குறைந்திருந்தாலும், உள்ளத்தால் உயர்ந்தவர்களாக தங்களை நிருபித்துக் காட்டியிருக்கிறார்கள். அந்த நல்லோர்களை நாம் நினைத்துக் கொள்வோம். நெஞ்சத்தில் இணைத்துக் கொள்வோம். நினைவுகளில் அனைத்துக் கொள்வோம். பிற கென்ன? புறப்படுவோம் வாருங்கள்.