பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஏன் வளர்ச்சியில்லை?

ஏன் நாம் வளரவில்லை என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்ளாத குள்ளமாக இருப்பவர்கள் இல்லவே இல்லை என்று கூறலாம். காரியம் என்று ஒன்று உண்டென்றால், காரணம் ஒன்றும் இருக்கத்தானே வேண்டும்!

அதற்கு முதலாவதாகக் கூறக்கூடிய காரணம் ஒன்று உண்டு. அதுதான் பரம்பரை எனப்படும் (Heridity) பாரம்பரியம்

ஆகும்.

குள்ளமாய் இருக்கும் பெற்றோர்களுக்குக் குள்ளமான பிள்ளைகள் தான் இருப்பார்கள். இப்படி இருப்பது இயற்கையானதுதான்.

ஆனால் உயரமான தாய் தந்தைக்குக் குள்ளமான பிள்ளைகள் இருப்பதையும் பார்க்கிறோம். குள்ளமான பெற்றோர்களுக்கு உயரமான மக்கள் இருப்பதையும் காண்கிறோம். அது எப்படி நடக்கிறது? பரம்பரை என்பார்களே, அதன் தொடர்ச்சியான அற்புத செயல்தான் அது.

இரண்டாவது காரணம். உடலின் உயரத்தைக் கட்டி காக்கும், கட்டுப்படுத்தும் சுரப்பிகள் ஒழுங்குற சரியாக இயங்காமல் போவதும் ஆகும்.

நமது உடலிலே நாளமில்லா சுரப்பிகள் என்று ஒரு சில சுரப்பிகள் உண்டு. அவை ஒரு வித ஆற்றல் வாய்ந்த அமிலங்களை உண்டுபண்ணுகின்றன. அவை ஓடுகின்ற இரத்த ஓட்டத்திலே, இரண்டறக் கலந்தும் விடுகின்றன. அவையே உடலின் வளர்ச்சி, விருத்தி மற்றும் வேண்டிய அமைப்புகளையும் உருவாக்கும் விதத்தில் பணிபுரிகின்றன. -