பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 1 - டாக்டர்.எஸ்.நவராஜ்செல்லையா

அவற்றில் தைராய்டு என்ற சுரப்பி ஒன்று உண்டு. அது ப டலின் எடையைக் கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றலைக் கொண்டிருக்கிறது. அது போலவே, பிட்யூட்டரி சுரப்பி என்றும் ஒன்று உண்டு. அது மூளையின் அடிப்பாகத்தில் எலும்புக் குழியில் இருக்கிறது. அது ஒரு பட்டாணி அளவு பருமன் உடையதாகவும் விளங்குகிறது.

உருவத்தில் அளவில் இது சிறியதாக இருந்தாலும், செய்கின்ற செயலில் மிகவும் சிறப்பான விதத்திலேதான் அமைந்திருக்கிறது. இது பிற சுரப்பிகளையும் கட்டுப்படுத்துகின்ற ஆற்றலையும் பெற்றிருக்கிறது என்று கூறுகின்றார்கள்.

முதலில் பரம்பரை பிறப்பு பற்றி மேல் நாட்டறிஞர் விளக்கும் முறையை இங்கே காண்போம். ஒரு வெள்ளை இன மாதுவும் கறுப்பு நிற மனிதனும் திருமணம் செய்து கொண்டால், பிறக்கின்ற குழந்தை வெள்ளைக் குழந்தையாகப் பிறக்கலாம். பிறகு அந்த வெள்ளை நிறக் குழந்தை வாலிபம் அடைந்து வெள்ளை இனத்திலே பெண் பார்த்துத் திருமணம் செய்து கொண்டாலும் பிறக்கும் குழந்தை வெள்ளையாகப் பிறக்கும் என்பது நிச்சயமல்ல. குழந்தை கறுப்பாகவும் பிறக்கலாம்.

=

இதுபோல பிறக்கவில்லையென்றால் அதற்கு அடுத்த பரம்பரையில் கூட கறுப்புக் குழந்தை பிறக்கலாம். இவ்வாறு பரம்பரை இயல்புகள், குணாதிசயங்கள் ஏறத்தாழ ஏழு தலைமுறையாகத் தொடர்ந்து வருகின்றன என்பார்கள் இன்னும் கூறப் போனால் தெய்வ நம்பிக்கை மிகுந்தவர்கள் கூறுவார்கள். குணாதிசயங்கள் மட்டுமல்ல. பழியும் பாவமும் புண்ணியமும் கூட

தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வரும் என்பார்கள். ஆகவே, ஒருவர் உயரத்திற்குப் பரம்பரையும் ஒரு காரணமாகும்.

تھے۔