பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வளர உதவுவோம்

இறைவனின் அரிய படைப்பே மனித தேகம் என்பார்கள் பக்தர்கள். இயற்கையின் அற்புதமே மனித உடல் என்பார்கள் வேறு சிலர் என்றாலும், ஆராய்ச்சியாலும், அறிஞர்களாலும் ஆழ்ந்து முயற்சித்த பிறகும், இன்னதென்று கண்டு பிடிக்க இயலாத அளவுக்கு நுண்ணிய தன்மை வாய்ந்தது என்பதை மட்டுமே கூறி வியக்கின்ற அளவில் தான், நமது உடல் அமைந்திருக்கிறது

(வாகி இருக்கிறது.

எப்பொழுது எது தேவை என்பது உடலுக்குத் தெரிகிறது. எந்த உறுப்பு எந்த அளவு வளர வேண்டும். எந்த வயதுவரை வவேண்டும் என்பதும் உடலுக்குத் தெரிகிறது. ஏறத்தாழ 23 வயதுவரை உடலில் வளர்ச்சி உண்டு என்று உடற்கூறு வல்லுநர்கள் கூறுகின்றார்கள். --

பூச்செடிகள் இயற்கையாக வளர்வது தான் என்றாலும், அதை அக்கறையுடன் பாதுகாத்தால், அவ்வப்போது நீர் விட்டால்: பம் இட்டால், நச்சுக் கிருமிகள் வந்து பாழ்படுத்தாமல் பத்துக்கொண்டால், அதன் தோற்றமே தனிதான். தரும் பயனும் அவதிதான். ---

அது போலவே, நமக்குப் பயன்படுகின்ற பொருட்கள், காப் சைக்கிள், ரேடியோ போன்றவைகளும், அவற்றை நாம் ஆசையுடன் பார்த்து, அன்புடன் தடவி, ஆனந்தம் மேலிட்டு பத்திரப்படுத்தி சுத்தப்படுத்தி வைக்கின்ற நிலையில் கூட நாம் நமது பல பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை. அக்கறை

கா டுவதில்லை. அலட்சியப்படுத்துகிறோம்.