பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களும் உயரமாக வளரலாம்

ஏன்? நமக்கு அதற்கு நேரமில்லை. நோய் வந்த பிறகு நொந்து நலிந்த பிறகு தான். நமக்கு உடலைப்பற்றிய அக்கறைே வருகிறது. ஆர்வமும் எழுகிறது.

உடல் தானாக வளர்கிறது. அதற்கு தனியாக நாம் என் செய்ய? தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தாலும் தண்ணீர் வேகமா ஒடிச் செல்ல வழி வைத்துவிட்டால், விரைவான பயன் கிடைக்குமே வேண்டாத புல்லும் செடியும், நீர் ஓடும் வழியி நிறைந்துவிட்டால், நீருக்கு ஏது வேகம்? -

அதுபோல்தான் உடல் வளர்கிறது என்றாலும், நாம் அதற்கு உதவ வேண்டும். உடலை பத்திரடிான பொருள் என் நினைத்துப் பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

குனிந்து நடப்பது, கூனிக்கொண்டு அமர்வது. வளைந்து கொண்டு நிற்பது நெளிந்துக் கொண்டு எழுதுவது குறுக்கிக்கொண்டு உறங்குவது போன்ற செயல்கள் எல்லாம்.

உடலின் வளர்ச்சிக்கு ஊறு விளைவிப்பனவாகும்.

பயன்படுத்துகின்ற உறுப்புக்கள் தான் பாங்காக வளரும் என்பது இயற்கை நியதி, உடலை நேராக நிமிர்த்தி வைத்து ராஜநடை என்பார்களே அது போன்ற செம்மாந்த நடை நடக்கும் முறையை சிறுவர்களுக்கு நாம் கற்பிக்க வேண்டும்.

தடைபடாத குருதியோட்டம். தேவைக்கு மேல் நுரையீரலுக்குள் போய்வரும் பிராணவாயு உடல் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாததன்றோ நாகரிகம் என்ற பெயரால் உடலுக்கு இறுக்கமான சட்டை கால் சட்டை போட்டுக் கட்டி வைத்திருப்பதும், உடல் இயக்கத்தைக் கெடுத்து விடும். தடுத்துவிடும். ஆகவே, உடை உடுப்பதில் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் கவனம் செலுத்த பெற்றோர்கள் முயல வேண்டும்!