பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களும் உயரமாக வளரலாம் 24

அத்துடன் அவனது உடல், உயரத்திலும் மாற்றம் தெரிந்தது. ஒரு ஆண்டுக்குள் அவன் 3 அங்குல உயரம் அதிகமாக வளர்ந்து விட்டான். அடுத்த ஆண்டு மேலும் 3 அங்குல உயரம்.

இவ்வாறாக 1969 ஆம் ஆண்டில் அவனது உயரம் 6 அடி 2 அங்குலமாக உயர்ந்தது. தாண்டிய உயரமோ 7 அடி 4 அங்குலமாக உயர்ந்தது. ரஷ்யாவின் சிறந்த வீரன் என்ற பட்டத்தையும் பெற்றுத் தந்தது. 1972 ஆம் ஆண்டில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்திற்கும் அழைத்துச் சென்றது.

எப்படி ரஸ்டம் உயர்ந்தான்? அவன் எப்படி வளர முடிந்தது என்பதைப் பற்றியெல்லாம் ஆராய்ச்சி நடந்தது. விளையாட்டு ரசிகர்கள் மத்தியிலும் விஞ்ஞானிகள் அளவிலும் வினாக்கள் எழுந்தவண்ணம் இருந்தன.

இது ஒரு உணர்வுபூர்வமான காரணத்துடன் அமைந்திருக்கிறது. இளைஞனின் மன எழுச்சி, உற்சாகம், இலட்சியம், இடைவிடாத உழைப்பு, உன்னதமான சாதனையாக அவனை உயர்த்தியிருக்கிறது. இது பலவிதமான சூழ்நிலையின் பிரதிபலிப்பு என்பதாகக் கூறினார்கள்.

உண்மைதானே.

முயன்றால் நிச்சயம் முடியும். நினைத்தால் நீங்களும் வளரலாம் என்பதற்கு ரஷ்ய வீரர் ரஸ்டமே சாட்சி, அவனது உயரம் வளர்ந்ததை விஞ்ஞானிகள் விளக்கிய விதத்தை காண்போம்.