பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. வளர்ச்சிக்குரிய விளக்கம்.

ரஸ்டம் என்ற அந்த இளைஞன் எப்படி வளர்ந்தான்? என்ன காரணத்தால் உயர்ந்தான் என்றெல்லாம் விளக்க வந்த விஞ்ஞானிகள், அவன் செய்த உடற்பயிற்சிகளை உதாரணமாகக் ሓበ[ ட்டினார்கள்.

தொடர்ந்து அவன் செய்து வந்த உடற்பயிற்சிகள் உயரமாக வளர்ந்திட உதவின. ஒரு குறிப்பிட்ட இலட்சியத்திற்காக, ஒரு குறிப்பிட்ட முறைப்படி, குறிப்பிட்ட பல பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்ததன் காரணமாக, அவன் எலும்புகள் வளரத் தொடங்கின.

உயரே தாண்டிக் குதித்துச் செய்யும் பயிற்சி. உயரமான கம்பியில் தொங்கித் தொங்கிச் செய்யும் கம்பிப் பயிற்சிகள் (bar Exercises) எல்லாம் அவன் உயரமாக வளர உதவின. உடல் உறுப்புக்களை பயிற்சிக்குப் பக்குவப் படுத்தியது போலவே, உடலை முன்புறமாக வளைத்து நிமிர்த்திச் செய்த பயிற்சிகளின் காரணமாக, என்டோகிரைன் சுரப்பிகளை நன்கு இயக்கிவிட்டது தான் இதில் முக்கியமாக நாம் கவனிக்க

வேண்டும் என்று கூறினார்கள் வல்லுநர்கள்.

ஏற்கனவே நம் உடலின் வளர்ச்சிக்கு ஒப்பற்ற சக்தி மிகுந்ததாக விளங்கும் என்டோகிரைன் ஆற்றலைப் பற்றி விளக்கிக் கூறியிருக்கிறோம். சுரப்பியின் அந்த எழுச்சி தரும் தன்மையில் தான் ரஸ்டம் செய்த பயிற்சிகள் அமைந்திருந்தன.

மேலும், வல்லுநர்கள் கூறிய விளக்கத்தையும் காண்போம்.