பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களும் உயரமாக வளரலாம் 26

π

"என்டோகிரைன் சுரப்பிகளை நன்கு வேலை செய்திடத் தூண்டுவது போல் இயக்கிவிட்டால், உடல் நன்கு வளர்ச்சி பெறும்

என்பதை நிரூபிப்பது போல் ரஸ்டமின் முயற்சி அமைந்திருந்தது.

H

என்டோகிரைன் சுரப்பியின் வேலை நரம்பு மண்டலத்தினூடே நன்றாகவே கலந்துவிட்டது.

நரம்பு மண்டலமானது ஓர் உணர்ச்சி மண்டலம் அல்லவா!

ரஸ்டத்தின் ஆர்வமும் உள் உணர்வும், உயரமாக வளர வேண்டும் என்ற உற்சாகம் நிறைந்த உத்வேகமும், என்டோகிரைன் அமைப்பில் கலந்துவிடவே, அதன் காரணமாக நரம்பு மண்டல ஆற்றலினால் உடல் உளர்ச்சியை அந்த இளைஞனால் பெற முடிந்தது என்பதாக அவர்கள் விளக்கம் தந்தார்கள்.

பயிற்சியாளர் விக்டர் லான்ஸ்கி, தன் கீழ் பயிற்சி பெறும் ரஸ்டமின் ஆசையை அறிந்து, அதற்கேற்ற அவனது ஆற்றலையும் புரிந்துகொண்டு, அவன் உடல் வளர்ச்சிக்கு உதவக் கூடிய பயிற்சி முறைகளை அளித்ததன் காரணமாகவே, ரஸ்டம் உயரமாக வளர முடிந்தது என்று கூறிய விஞ்ஞான பூர்வமான கருத்தைக் கேட்டவர்கள், ஏற்றுக்கொண்டார்கள். போற்றிப் புகழ்ந்தார்கள். -

ஐயமுற்றோர் ஐயம் தெளிந்தனர். கண்முன்னே உயரமாக வளர்ந்து இருக்கிறான். பரம்பரை பரம்பரையாக அவன் குடும்பத்தில் உள்ளவர்களை விட அதிக உயரமாகவும் வளர்ந்திருக்கிறான். அவன் பரம்பரைத் தத்துவத்தை உடைத்துத் தகர்த்திவிட்டான். சொல்லவும் முடியாத, குள்ளமான பெற்றோர்களுக்கு குள்ளமான மகன்தான் பிறக்க முடியும், பிறக்க வேண்டும் என்ற தத்துவத்தை மாற்றி அமைத்துவிட்டான்.