பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களும் உயரமாக வளரலாம் 28

மூடிப்போய் விட்டனவா என்பதைப் பார்த்து. இவரால் வளர முடியும், அவரால் வளரமுடியாது என்பதாகச் சொல்லிவிடுவார்கள் என்கிறார் சொரூபினா அவர்கள்.

இவ்வாறு மூட்டுப்பகுதிகள் வளர்ச்சியடைவதில் முழுமை பெற்றுவிடுகிற வயதாக 18லிருந்து 20 வயதுக்குள் அமைந்துவிடுகிறது.

என்டோகிரைன் மற்றும் ஹார்மோன் அக்காடமியில் இதுபோன்ற சிகிச்சை முறைகளையும் ஏற்றுக் கொண்டு. குள்ளத்தன்மையை மாற்றும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்கள் தரும் மருத்துவப் பரிகாரத்தில், உடற்பயிற்சியினைத் தான் மிகவும் முக்கியமானதாகக் கருதுகின்றனர்.

அவர்கள் அதற்காகப் பல்வேறு விதமான வழி முறைகளையும் சிபாரிசு செய்திருக்கின்றனர். அவற்றில் மிக மிக முக்கியமானவைகள் நீச்சல் பயிற்சி மற்றும் பல்வேறு விதமான விளையாட்டுக்களும், ஒட்டப் பந்தய நிகழ்ச்சிகளும் ஆகும்.

எடை தூக்கும் நிகழ்ச்சியை (Weight Lifting) அவர்கள் நிராகரித்திருக்கிறார்கள். ஏனெனில், கன எடை தூக்கும் பயிற்சியானது, எலும்புகளின் கனத்தையும் தசைகளின் கனத்தையும் பெரிதாக்கிவிடுகிறது என்பதால் தான்.

அதற்காக என்னென்ன உடற்பயிற்சிகள் செய்யவேண்டும் என்பதையும், ரஷ்யாவின் சிறந்த உடற்கல்வித்துறை மருத்துவ வல்லுநராக விளங்கும். N. துவஷேவா (Therapist) என்பவரைக் கொண்டு தொகுத்துத் தந்திருக்கிறார்கள்.

தங்களது தேகம் பார்ப்பதற்கு அழகாகத் தோற்றமளிக்க வேண்டும். நலமுடன் இருப்பதாக உணர வேண்டும். உடல்