பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| | டாக்டர்.எஸ்.நவராஜ்செல்லையா

விரைவாக இரண்டு கால்களையும் தரையிலிருந்து மேற்புறமாக 40 டிகிரி முதல் 45டிகிரி வரை உயர்த்தவும். பிறகு ஒவ்வொரு காலாக மாற்றி மாற்றி உயர்த்தவும்.

ஒவ்வொரு காலுக்கும் 8 முதல் 10 வரை பயிற்சி செய்யலாம். சுவாசத்தை விருப்பம் போல் இழுத்து வெளியே விடலாம்.

பயிற்சி 5 தொடக்கநிலை:

கால்களை ஒன்றாக சேர்த்து நிமிர்ந்து நின்று கைகளைக் கொண்டுசென்று தலைக்குப் பின்புறமாகக் கட்டிக் கொள்ளவும்.

பின்னர், முன் புறமாகக் குனியவும். குனிந்திருக்கும் பொழுது மூச்சை வெளியே விடவும்.

அதற்குப் பிறகு நன்றாக நிற்கவும். மூச்சை நன்கு உள்ளே இழுக்கவும். 8 முதல் 10 வரை செய்யலாம்.

பயிற்சி 6

மெதுவாக ஓடவும், முடிந்த வரை அதிக வேகம் கூட்டாமல் வேகமாக 20 மீட்டர்துாரம் வரை ஒடவும். இது போல் 10 அல்லது 12 முறை செய்யவும்.

பயிற்சி 7

தொடர்ந்தாற் போல் நன்கு வேகமாக நடக்கவும். ஆரம்பத்தில் இங்கே கூறியுள்ள எண்ணிக்கையின் படி செய்து, பழக்கம் ஆகஆக, எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்ளவும். அடுத்து, யோகாசனப் பயிற்சிகளைக் காண்போம்.