பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 டாக்டர்.எஸ்.நவராஜ்செல்லையா

செய்துவிட்டு உடலில் பிடிப்பும் நலிவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான்.

குளிக்கப் போய் சேற்றைப் பூசிக் கொண்ட கதையாக ஆகக் கூடாது என்பது போல், நலம்பெற முனைந்து நலிவுக் குள்ளாகக்கூடாது என்பதால் அன்பர்கள் இப்பகுதியைகூர்ந்து படித்து, மனதில் பதியவைத்துக் கொண்டு பின்பற்ற வேண்டும்.

பயிற்சிக்கு முன் பயனுள்ள குறிப்புகள்.

1. ஆசனம் செய்யும் பொழுது அவசரமில்லாமல் e J

அமர, மெதுவாகச் செய்யவும்.

, ஒவ்வொரு பயிற்சிக்கும் கொடுத்திருக்கின்ற குறிப்புகளை

நன்கு உணர்ந்து கொண்டு செய்யத் தொடங்கவும்.

  • . ஆசனத்தின் முழு வடிவமும் வர வேண்டும் என்று ஆசைப்பட்டு, முதல் முயற்சியிலேயே முனைந்து வலிந்து செய்யக் கூடாது. உடலை கஷ்டப்படுத்துவதோ, வலி ஏற்படும்படி ஆசனம் செய்வதோ தவறு. அதனைத் தவிர்த்து விட வேண்டும்.

A குறிப்பிட்ட ஆசனத்தை குறிப்பிட்ட எண்ணிக்கை அல்லது குறிப்பிட்ட வினாடிவரை தான் செய்யவேண்டும். நேரத்தை நீடித்துக்கொண்டிருக்கும் பழக்கத்தை நிச்சயம் தவிர்த்து விட வேண்டும்.

h அதிகமாக உடல் நலிவுற்றவர்கள் சுகமில்லாதவர்கள் ஆசனம் செய்யக்கூடாது. விரும்பினால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு அனுமதி பெற்ற பிறகே தொடங்க வேண்டும்.