பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களும் உயரமாக வளரலாம் 36

6.

10.

ஆசனம் செய்யும் பொழுது வயிறு காலியாக இருப்பது நல்லது. உணவு உண்ட ஏறத்தாழ மூன்று மணி நேரத்திற்குப் பிறகு ஆசனம்செய்யத் தொடங்குவது நல்லது. வயிறு நிறைய உண்டுவிட்டு ஆசனம் செய்வதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.

அது போலவே ஆசனம் செய்த பிறகு எதையும் உட்கொள்ளுவதையும் தவிர்த்து விடவேண்டும். அதாவது அரைமணி நேரத்திற்குப் பிறகே உட்கொள்ளுவது நல்லது என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.

ஆசனம் செய்யும் பொழுது களைப்பு ஏற்படாதவாறு

பார்த்துக் கொள்ளவும்.

படபடப்பான சூழ்நிலையில், மனோநிலையில் ஆசனம் செய்வதைத் தவிர்க்கவும்.

தலை வலி, வயிற்று வலி, ஜலதோஷம், இருமல் போன்ற நிலைகளில் கூட ஆசனம் செய்வதைத் தவிர்த்து விடுங்கள்.

ஆசனம் செய்து நீண்ட நாள் இடைவெளியிருந்தால மீண்டும் தொடங்கும் பொழுது பழகிக் கொள்பவர் போல கொஞ்சங்கொஞ்சமாக செய்து பழகவும். திடீரென்று ஆசனங்களை முழுமையாக செய்து விட முடியாது. அவ்வாறு ஆசைப்படுவதை தவிர்க்கவும்.

ஆசனம் செய்யும் நேரத்தை நீங்களே உங்கள்

வசதிக்கேற்ப ஒதுக்கிக் கொள்ளலாம். சூரியன் வெப்பமாயிருக்கும் நேரத்திலும், இரவில் வெகு நேரம்