பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| |

|'.

|M

|'

|s

டாக்டர்.எஸ்.நவராஜ்செல்லையா

(ൽ

கழித்தும் ஆசனம் செய்யும் உரிய நேரமாக

ஒதுக்கிக்கொள்ள வேண்டாம். அதாவது காலை ஐந்து மணியிலிருந்து எட்டு மணிக்குள்ளாகவும் மாலை நேரம் என்றால் 5 மணிக்கு மேலாக 7 மணி வரையில் செய்வது

பயன் தரக்கூடிய நேரமாகும்.

காலையும் மாலையும் ஒரே ஆசனத்தைத்தான் செய்து வரவேண்டும் என்பதில்லை. உரிய ஆசனங்களை மனம் உகந்ததை, உவப்புடன் தினமும் செய்துவர வேண்டும் என்பதுதான் முக்கிய கருத்தாகும்.

தியான இடமாக

t

இருப்பது நல்லது. புகை, புழுதி துர்நாற்றம் வீசுகின்ற

பகுதியாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆசனனம் செய்யும் இடம் --Eમ 6ઈ!! :D

இடம் துாய்மையானதாக இருக்க வேண்டும். கீழே துணி விரிப்பு இருந்தால் நல்லது.

ஆசனம் செய்யும் பொழுது குறைந்த ஆடைகள் உடலில் இருப்பது தடைகள் இல்லாமலும் தடுமாற்றம் இல்லாமலும் தொடர உதவும். அதாவது அந்த ஆடைகளும் து.ாய்மையானதாக இருக்க வேண்டும்.

இறுதியாக ஒன்று

காலியான வயிற்றுடன்தான் ஆசனம் செய்ய வேண்டும்.

கட்டாயப் படுத்தி உடல் உறுப்புக்களை கஷ்டப்படுத்தி

செய்யக் கூடாது.

உயரமாக உடனே வளர்ந்திட வேண்டும் என்ற வேகத்தில்,

நீண்ட நேரம் ஆசனங்களைத் தொடர்ந்து செய்து விடாதீர்கள்.