பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களும் உயரமாக வளரலாம் 38

ஒரே நாளில் எல்லா ஆசனத்தையும் செய்யவும் முயலாதீர்கள். அவசரப்படாதீர்கள். அனுபவம் பெறுகிற வரையிலும், ஆசனத்தில் நல்ல முன்னேற்றம் அடைகிற வரையிலும் பொறுமையாக இருக்கவும். திறமையை வளர்த்துக் கொள்ளவும்.

வெற்றியும் புகழும் எப்பொழுதும் நம் கையில் தான் இருக்கிறது. ஏனென்றால் தெளிவான அறிவும், முடிவான உழைப்பும், சரியான வழியும் இருக்கும்பொழுது, தோல்வி எப்படி ஏற்படும்? அந்த நம்பிக்கையுடன் ஆசனத்தை இனி நீங்கள் தொடரலாம். -

1. தலையான பயிற்சி

பத்மாசன இருக்கையில் அமர்ந்து, தலையை முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் சுழற்சிபெறுவதற்கான வகையில் சுழலச்செய்கின்றபயிற்சியையே தலையாயப் பயிற்சி என்று அழைத்திருக்கிறோம். .

நாளமில்லா சுரப்பிகள் என்று ஏற்கனவே முன் பகுதியில் விளக்கியிருக்கிறோம். அவற்றிலே உயரமாக வளர்வதற்கு உபயோகமான பணியை ஆற்றுகின்ற சுரப்பி ஒன்று இருக்கிறது, அதன் பெயர் பிட்யூட்டரி சுரப்பியாகும்.

மூளையின் அடிப்பாகத்தில் மிகப் பத்திரமான எலும்புக் கூட்டின் மத்தியிலே பாதுகாப்பாக அமையப் பெற்றிருக்கும் பிட்யூட்டரியை நாம் நன்கு இயக்கிவிட்டால், அதன் வழியே உறுப்புக்கள் செழுமை பெற்று உயரமாக வளர்ந்திட உதவும் என்பதால், அதற்குரிய பயிற்சியாக கீழ் வரும் பயிற்சியை முதன் முதலாகச் செய்யலாம்.