பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களும் உயரமாக வளரலாம் 44

பிறகு மெதுவாக முன்புறமாகக் குனிந்து இடது கையால் இடது கால் பெருவிரலையும், வலதுகையால் வலது கால் பெருவிரலையும் பிடித்துக் கொள்ளும் வகையில் முன்புறமாகக் குனிய வேண்டும்.

མ། /

கால்களை மடக்காமல் கால்கள் தரையைவிட்டு மேலே எழும்பாமல் மேலும் குனிந்துசென்று. முழங்கால்களின் மீது

முகம்படும்படி வைக்கவும்.

இதே நிலையில் 10 வினாடிகள் இருக்கலாம் அல்லது இருக்க முடியும் என்ற இதமானநிலை அமைந்திருக்கும் வரையில் தொடரலாம்.

பிறகு மெதுவாக மேலே எழும்பி நிமிர்ந்துஉட்காரவும்.

இந்தப் பயிற்சி நேரம் முழுவதுமே இயல்பான மூச்சோட்டம் மூச்சிழுத்தல் இருக்கலாம். கீழே குனிந்து கால்களைத் தொடும்வரை வசதிக்கேற்றாற்போல் மூச்சிழுத்துக் கொள்ளலாம். அது மேலும் குனிவதற்கு உதவியாகவும் இருக்கும்.

குறிப்பு: ஆரம்ப காலத்தில் கட்டை விரல்களைத் தொடுவதே கடினமாக இருக்கும். அதற்காக தொட