பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 டாக்டர்.எஸ்.நவராஜ்செல்லையா

முடியவில்லையே என்று கவலைப்படக் கூடாது. தைரியத்தை இழக்காமல் முடியும் என்ற முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து தினம் பழகினால் விரைவில் இது எளிதாகிவிடும்.

தொட முடியவில்லையே என்று மனக் கவலையுடன் வேதனையுடன் பயிற்சியை செய்யக் கூடாது முடிந்ததை செய்கிறோம் என்ற மனதிருப்தியுடன் செய்ய வேண்டும். அதே நேரத்தில் முழுமையாகச் செய்தாக வேண்டும். செய்து விடலாம் என்ற நம்பிக்கையுடனும் செய்ய வேண்டும்.

பயன்கள் இடுப்பு முன்புறமாக முழுதும் வளைவதால் இடுப்புப் பகுதிகளுக்கு அதிகமான இரத்த ஓட்டம் செல்கிறது. அதனால் அந்தப் பகுதிகள் செழுமையடைகின்றன. வயிற்றுத் தசைகளை முன்புறமாக மடித்து பயிற்சி செய்வதால் அவைகள் வலிமையடைகின்றன. இதனால் மலச்சிக்கல் இல்லாத தூய்மை நிலை அடைய ஏதுவாகிறது. +

தொந்தியைக் குறைக்க இது சிறந்த ஆசனமாகும். எளிதாக நெகிழும் தன்மையில் முதுகெலும்பும் தண்டுவடமும் நெகிழ்ச்சி பெறுவதால் உயர்வதற்கு நல்ல வழி அமைகிறது இளமையாய் வாழும் இயல்பினையும் அளிக்கிறது. நிமிர்ந்து நிற்கவும், நிமிர்ந்து நடக்கவும் போன்ற பாங்கினை அளித்து தோற்றத்தில் மேன்மையைத் தருகிறது.

4. அர்த்த மத்சியேந்திராசனம்.

பெயர் விளக்கம்: அர்த்த என்றால் சமஸ்கிருதத்தில் பாதி என்று பொருள்படும். மத்சியேந்திராசனத்தில் இது பாதி இருக்கை அமைப்பாக அமைந்திருப்பதால் இந்தப் பெயர் பெற்றிருக்கிறது.