பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களும் உயரமாக வளரலாம் 46

மத்சியேந்திரா என்ற யோகி ஒருவர் அக்காலத்தில் இருந்தார். அவர் தன்னிடம் யோகம் பயின்ற ஹடயோக மாணவர்களுக்கு இதனை முதன் முதாலாகக் கற்பித்தார் என்றும். அதனால்தான் அவர் பெயரிலேயே அர்த்த மத்சியேந்திராசனம் என்ற இந்தப்பெயர் வந்ததது என்றும் கூறுகிறார்கள்.

செயல்முறை கால்களை முன்புறமாக நீட்டி விரிப்பின் மீது விறைப்பாக நேரே நிமிர்ந்து உட்காரவும்.

முழங்கால் வளைய வலது முழங்காலை மடித்து. இடது தொடையின் அடிப்பாகத்தில்,வலது குதிகால் படும்படி வைக்கவும். மேலும் மேலும் வலது குதிகாலை உள்ளேயே அழுத்திப் பார்த்தால் இணையாக சேர்ந்துபோகின்ற இரண்டு எலும்புகளுக்கிடையே தசையாலான இடைவெளி இருப்பதை நன்கு உணரலாம். குதிகாலை அந்தத் தசையாகத்துடன் அழுத்தி வைத்து உட்காரவும். ஆனால், குதிகால் மேல் உட்காரக் கூடாது.

F.

அடுத்து. இடது காலைத் தூக்கி, கீழே வைக்கப்ட்டிருக்கும் வலது காலுக்குக் குறுக்கே அப்புறம் வலப்புறம் கொண்டு சென்று வைக்கவும் (படம் காண்க).