பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

முன்னுரை

நீங்களும் உயரமாக வளரலாம் என்ற இந்த நுாலை நீங்கள்

நம்பிக்கையுடன் கையில் எடுத்து விட்டீர்கள்.

வளரும் கனவுகளினால் விளைந்த ஆசைகளின் துணையாக, இந்நூால் உங்களுக்கு உதவினால், நிச்சயம் நான் மகிழ்ச்சி அடைவேன். மேலும் பல முயற்சிகளை மேற்கொள்வேன்.

இந்த நுால் படித்து மகிழ்வதற்காக மட்டுமே எழுதப் பட்டதல்ல. பயிற்சி செய்து பயனடையவும் தான். பயிற்சி செய்தால்தான் பயன் பெறமுடியும் என்று இங்கே உங்களுக்கு நான் அழுத்திச் சொல்வதற்குக் காரணம். எனது அனுபவம் தான்.

பாண்டிச்சேரியில் நடந்த புத் தகக் கண் காட்சியில் தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள் என்னும் எனது நுாலை வாங்கிய ஒரு அன்பர், அதைப் படித்து முடித்த பிறகு, புத்தகத்தைப் பத்திரமாக வைத்துக் கொண்டாராம். மறு ஆண்டு நடந்த புத்தகக் கண்காட்சிக்கு வந்த அவர், அவசரம் அவசரமாக என்னை வந்து சந்தித்தார்.

i. உங்கள் புத்தகத்தைப் படித்த பிறகும் என் தொந்தி குறையவில்லையே என்று என்னிடம் கூறி வருத்தப்பட்டார். திகைத்துப் போன நானும் தவறாகப் பயிற்சிகளைச் செய்தீர்களா? பயிற்சிகள் ஏதாவது உங்களுக்குப் புரியாமல் இருக்கிறதா என்று கேட்டேன்.

அவர் சொன்ன பதில் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது.

நான் புத்தகத்தைப் பலமுறை படித்துவிட்டேன் படித்தாலே போதும். தொந்தி குறைந்து விடும் என்று நினைத்துக் கொண்டேன் என்றார்.

இப்படியும் பல அன்பர்கள் இருக்கின்றார்கள். காக்கைகள் க. ட்டிலே போய் முட்டை இட்டுவிட்டு, குஞ்சு பொரிக்கின்ற பொறுப்பை

-