பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களும் உயரமாக வளரலாம் 48

எண்ணிக்கை:

1. வலது காலை மடித்து வைத்து இடதுகாலை மாற்றி வைத்து. வலது கையால் இடது காலைப் பிடித்து, இடது கையால் வலது தொடையைப் பிடிக்கவும்.

2. கழுத்தை இடது தோள்புறம் திருப்பி,முதுகினைத்

திருப்பவும். பிறகு நிமிர்ந்து இருக்கவும்.

5. பாத ஹஸ்தாசனம்

பெயர் விளக்கம்: பாதஹஸ்தாசனம் என்றசொல்லை நாம் பிரித்தால், பாதம்சஹஸ்தம்+ஆசனம் என்று மூன்றாகப் பிரியும்.

பாதம் என்றால் கால்கள். ஹஸ்தம் என்றால் கைகள். ஆசனம் என்றால் இருக்கும் நிலை அமைப்பு

கால்களுக்கும் கைகளுக்கும் ஒரு இணைப்பினை உண்டாக்கும் இருக்கை என்பதே இதன் அடிப்படை அமைப்பாகும்.

இதனை நின்றுகொண்டே செய்யும் பச்சிமோத்தாசனம் என்றும் கூறுவதுண்டு.

செய்முறை உடலை விறைப்பாக வைத்து. மார்பினை உயர்த்தி கால்களை சேர்த்து வைத்து நிமிர்ந்து நிற்க வேண்டும்.

தலைக்கு மேலே கைகள் இரண்டையும் உயர்த்தி இடுப்பை முன்புறமாக வளைத்து முன்பாதங்களைத் தொடுவதற்காகக் குனிய வேண்டும். குனிந்து, கட்டை விரல்களையும் பிடித்துக் கொள்வதோடல்லாமல், மேலும்குனிய வேண்டும்.