பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களும் உயரமாக வளரலாம் 50

எண்ணிக்கை:

1. கால்களை சேர்த்து வைத்து, தலைக்கு மேல் கைகளை உயர்த்தி நிற்க வேண்டும்.

2. முழங்கால்களை மடக்காமல் குனிந்து,கட்டை விரல்களைப் பிடித்து. முகத்தை முழங்கால்களின் மீது படும்படி தொடவும்.

3. முதல் எண்ணிக்கை போல கைகளை உயர்த்தி நிற்கவும்.

4. இயல்பாக நிமிர்ந்து நிற்கவும்.

பயன்கள்: பச்சிமோத்தாசனத்திற்குக் கிடைக்கும் அத்தனைப் பயன்களும் இதிலும் கிடைக்கும். உடல் உயரமாக வளர இது உதவுகிறது. தொந்தியைக் குறைய வைக்கிறது. கனமில்லாத உடல் பெற வைக்கிறது. தேவையில்லாத வயிற்றுத் தசைகளைப் போக்குகிறது. முதுகெலும்பின் வளையத்தின் நெகிழ்ச்சி மிகுதிப்படுகின்றது. -

6. சர்வாங்காசனம்

பெயர் விளக்கம்: சர்வாங்கம் எனும் சொல், சர்வம் + அங்கம் எனப் பிரிந்து, அனைத்து உறுப்புக்கள் என்ற பொருளைத் தருகிறது.

இந்த ஆசன இருக்கையில், எல்லா உறுப்புக்களும் தொடர்ந்து சேர்ந்து செயல்படுவதையே குறித்து நிற்கிறது.

பொதுவாக இந்த ஆசனத்தை தோள் தாங்கி (Shoulder Stand) என்றும் அழைப்பார்கள். இது யோகிகளின் அறிவார்ந்த