பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 டாக்டர்.எஸ்.நவராஜ்செல்லையா

பெரும் திறமை மிகுந்த ஆசன அமைப்பு என்றும், மனித மூளையின் அரிய கண்டுபிடிப்பு என்றும் புகழ்ந்துரைப்பார்கள்.

இதனை மேல்தட்டு ஸ்டிேஸ் முறையில், மெழுகு வர்த்திப் பயிற்சி (Candle) என்றும் கூறுகின்றார்கள்.

செயல் முறை விரிப்பின் மீது அமர்ந்து, பிறகு கால்களை - நீட்டி மல்லாந்து படுக்கவும். கைகள் இரண்டையும் பக்கவாட்டில் வைத்திருக்கவும். சுவாசம் வழக்கம்போல, இயல்பாக இருக்க வேண்டும்.

இப்பொழுது கால்கள் இரண்டும் இணையாக இருக்குமாறு வைத்து, மெதுவாக இரு கால்களையும் மேலே உயர்த்த வேண்டும். கொஞ்சங் கொஞ்சமாக இடுப்புப் பகுதி (Trunk), பிறகு மேல் பகுதியை (Hip) உயர்த்தி முழங்கால்களை மடக்காமல் விரைப்பாக வைத்துக் கொண்டே மேல் நோக்கி உயர்த்த வேண்டும்.