பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களும் உயரமாக வளரலாம் 52

உயர்த்திக் கொண்டிருக்கும் பொழுதே, முழங்கைகளை இருபுறமும் தரையில் ஊன்றி. இடுப்புப் பகுதியை இருபுறமும் பிடித்துத் தாங்கிக் கொள்ளவேண்டும். பிறகு, இன்னும் காலை செங்குத்தாக நிற்கும்படி (Verticle) மேலே உயர்த்த வேண்டும்.

கழுத்திலும், தோள் பகுதியிலும் உடல் எடை முழுவதும் விழுவது போல, கைகளை உயர்த்தி நின்று, மோவாயை (Chin) மார்புக்குழி மீது (அதாவது இரண்டு தோள் எலும்புகளும் சேருமிடம் வைத்து அழுத்த வேண்டும். இதற்கு மோவாய் பூட்டு (Chin Lock) GT6öīg) @Luft.

செங்குத்தாகக் காலை உயர்த்தி இருக்கின்ற பொழுது கழுத்தின் பின்பாகம், தலையின் பாகம் மற்றும் தோள்களின் பகுதிகள் அனைத்தும் தரையைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

குறிப்புகள் இந்த ஆசனத்தை செய்யுபொழுது உடலை முன்னும் பின்னும் ஆட்டி அசைக்கக் கூடாது. உயர்த்திய நேரம் முடிந்ததும், உயர்த்திய கால்களை மெதுவாக அழகுபட (Elegance) கீழே இறக்க வேண்டும். -

திடீரென்று ஏற்றி உயர்த்தி இறக்குகின்ற முறை மிகவும் தவறான முறையாகும். இதனை நளினமான முறையிலே செய்வது நிறைந்த பயனை நல்கும். காலை மாலை இரு வேளைகளிலும் இதனைச் செய்யலாம்.

எண்ணிக்கை:

1. மல்லாந்து படுத்திருந்து கால்களை உயரே உயர்த்தி,

கைகளை இடுப்புப் பக்கவாட்டில் பிடித்து, செங்குத்தா உயர்த்துதல். -