பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 டாக்டர்.எஸ்.நவராஜ்செல்லையா

2. மல்லாந்து படுத்திருத்தல்

பயன்கள்: சர்வாங்காசனம் செய்து முடித்த உடனேயே மத்சியாசனம் செய்வது நல்ல பயனைக் கொடுக்கும்.

மோவாயை கழுத்துக்குப் பக்கத்தில் அழுத்தும் போது, அருகிலுள்ள தைராய்டு சுரப்பிகளுக்கு இரத்த ஒட்டமானது அதிகம் பாய்ச்சப்படுகிறது. அதனால் தைராய்டு வளம் பெறுகிறது. அந்த தைராய்டானது வேலையில் குறைந்தால் நோயுறுதல், புத்திமங்குதல், ஞாபகசக்தி குறைதல் போன்ற கெடுதல்கள் உண்டாகும். ஆகவே தைராய்டு சுரப்பிக்கு நல்ல வளமையை இந்த ஆசனம் அளிக்கிறது.

இரத்த ஓட்ட மண்டலம், சுவாச மண்டலம், உணவுக் குழல் மண்டலம், மற்றும் கழிவகற்றும் பகுதிகள் அனைத்தும் சிறப்பாகப் பணியாற்ற உதவுகிறது. மலச்சிக்கல் தீர்கிறது.

முதுகுத் தண்டினை வளம்பெற வைக்கிறது. ஜீரண சக்தியை மிகுதிப்படுத்துகிறது. மூல வியாதியைப் போக்குகிறது.

பலஹீனமுள்ள இதயமுள்ளவர்கள் இந்த ஆசனம் செய்வது உகந்தது அல்ல என்பது பலர் கருத்தாகும்.

7. மத்சியாசனம்

பெயர் விளக்கம்: மத்சி எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு மீன் என்பது பொருளாகும். ஆசன அமைப்பு அவ்வாறு ஒரு தோற்றத்தை அளிக்கிறது.

இந்த ஆசனப் பயிற்சியின் வழியாகப் பெறுகின்ற பிளாவினி பிராணாயாமம் என்னும் ஒரு வித யோக சுவாசித்தலின் மூலமாக ஒரு யோகாசனப் பயிற்சியாளர்,