பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களும் உயரமாக வளரலாம் 54

நீந்தாமலேயே தண்ணீரில் நீண்ட நேரம் மீன் போல மிதக்கலாம் என்கிறார்கள் ஆசனவல்லுநர்கள்.

நாம், நமது உடல் வளர்ச்சிக்காக இந்த ஆசனத்தைச் செய்யலாம்.

செயல் முறை விரித்த சமுக்காளத்தில், வஜ்ராசன இருக்கையில் முதலில் உட்கார வேண்டும்.

வஜ்ராசன இருக்கையில் இருந்த பிறகு, அப்படியே பின்புறமாக சாய்ந்து படுக்க வேண்டும். படுக்கும் போது வஜ்ராசன அமைப்பு சிறிதும் கலையக்கூடாது. கால்களும் விலகக் கூடாது. (படம் காண்க). வஜ்ராசன அமைப்புள்ள கால்கள் தரையினைத் தொட்டு கொண்டிருக்க வேண்டும்.

பின்னால் சாயும் போது திடுமென சாய்ந்து படுக்கக்

கூடாது.